தந்திரக் கை – 1

This entry is part 1 of 3 in the series தந்திரக் கை

சவ அடக்க நிகழ்ச்சி இருந்தது- அவள் இருந்தாள், ஆனால் அங்கே இல்லை- மேலும் பொலீஸ்காரர்கள், பிறகு ஒரு வழக்கறிஞர்; ஆலனின் சகோதரி எல்லாவற்றையும் நிர்வகித்திருந்தாள், எப்போதும் போல, தலையிடுவதே வழக்கமாகக் கொண்டிருந்த அந்தக் கடங்காரிக்கு இந்த ஒரு முறை அவள் உண்மையில் நன்றியுணர்வு கொண்டாள். அதெல்லாம் இப்போது மிகத் தொலைவாகி இருந்தன, நன்றியுணர்வும், பழைய வெறுப்புணர்வும் எல்லாம், ஒரு கணம் கட்டுப்பாடு இழந்து மூடிக் கொண்ட, அந்தப் பையனின் கண்ணிமைகளால் ஒன்றுமில்லாதவையாக ஆகிப் போயின.