பத்ரிநாத்தில் உடலை ஊடுருவும் அதிகாலை குளிர் நாங்கள் எதிர்பாராத ஒன்று! இதற்கு கேதார்நாத்தே தேவலை என்று நினைக்க வைத்து விட்டது. கிட்டத்தட்ட கேதார்நாத் உயரத்தில் தான் பத்ரிநாத்தும் இருக்கிறது. நாங்கள் தங்கியிருந்த விடுதியின் மாடி அறையில் இருந்து பனிபடர்ந்த மலைகள் கதிரவனின் பொற்கதிர்களால் ஜொலிக்கும் தரிசனமும் கிடைக்க.. ஆகா! பார்க்குமிடங்களெல்லாம் பரமாத்மா. கண்ணெதிரே நீலகண்ட மலையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தது. இதோடு ‘சார்தாம்’ கோவில்கள் யாத்திரை முடிந்தாலும் அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தியாவின் கடைசி கிராமமான ‘மனா’, புனித நதி சரஸ்வதி, பஞ்ச பிரயாகைகளைத் தரிசனம் செய்யாமல் யாத்திரை முழுமை பெறாது என்பதால் அங்குச் செல்ல தயாரானோம்.
Tag: மதம்
கருக்கலைப்பு உரிமை- அமெரிக்க அரசியலின் வினோதங்கள்
இவர்களில் கணிசமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள். வேலை இழப்பு, குடும்ப வன்முறை காரணமாக தனித்து விடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பொருளாதார பின்னடைவில் சிக்கியவர்கள் என பட்டியல் நீளுகிறது. இந்த தீர்ப்பின் மூலமாக இனி இவர்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள முடியாதவர்களாகி விடுவர். இந்த வருடத்தில் மட்டும் 100,000 பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாதவர்களாகி விடுவர் என்றொரு ஆய்வறிக்கை கூறுகிறது. இதனால் இந்தப் பெண்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும். இவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிப்புகள், பொருளாதார சிக்கல்கள், விருப்பமில்லாத உறவில் நீடிக்க வேண்டிய கட்டாயம், குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களை வளர்க்க போதுமான ஆதரவில்லாத நிலமை என பெண்களுக்கான பாதிப்புகளுக்கான தீர்வுகள் அல்லது மாற்றுத் திட்டங்கள் எதனையும் இந்த தீர்ப்பு பேசவே இல்லை.இச்சட்டம் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களைக் கூட கருத்தில் கொள்ளவில்லை என்பதே பெண்களின் மீதான வன்முறை தான். மேலும், கருத்தடை செய்து கொள்பவர்களுக்கும் கருவைக் கொன்ற குற்றவாளியாக கருதி தண்டனைகள் வழங்குவதும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
மதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்… ஒரு துயரத்தின் வரலாறு
கிட்டத்தட்ட 160 ஆண்டுகளாக இயங்கிவந்த கிருத்துவ திருச்சபைகளின் உறைவிடப் பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் மீது இந்த மதவெறியர்கள் கொடூரமான பாலியல் வன்முறைகளையும்,கொலைகளையும் ஈவிரக்கமில்லாமல் செய்திருக்கின்றனர்.அதிலும் பூர்வகுடி மக்களின் குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து அவர்களுக்கு கல்வி அளிக்கிறோம் என்கிற போர்வையில், அந்தக் குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகளை, வசதிகளைக் கூட செய்து தராமல், கட்டுப்பாடுகள் விதிப்பதாக பல்வேறு பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கியதால் பல குழந்தைகள் சித்திரவதைகளைத் தாங்கமுடியாமல் கொடூரமாக மரணித்திருக்கின்றனர்.
மான மாத்ரு மேயே மாயே
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான திரு. முத்துஸ்வாமி தீக்ஷிதர் பல அபூர்வ இராகங்களைக் கையாண்டு முத்தான கீர்த்தனைகள் படைத்தவர். மும்மூர்த்திகளில் பாரதத்தில் பெரும்பாலான இடங்களுக்குப் பயணித்தவரும் அவர்தான். அந்தந்தப் பிரதேசத்தின் சிறப்பு இராகங்களைக் கையாண்டு கர்னாடக இசைக்கு ஏற்றவாறு கீர்த்தனைகளை இயற்றினார். அவரது பாடல்களில் ‘குருகுஹ’ என்ற முத்திரையும், பாடப்படும் தெய்வத்தின் மூர்த்தியும், கீர்த்தியும், அந்தத் தலத்தின் வரலாறும், அதன் பூகோள அமைப்பும், அதன் முக்கிய பீஜாக்ஷரமந்திரமும் இடம் பெறும். மேலும், அந்தக் கீர்த்தனை எந்த இராகத்தில் பாடப்பட்டுள்ளது என்பதும் தெளிவாக வந்துவிடும்.
ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா?
பிற மத ஸ்தாபகர்களைப்போல் இயேசுவும் தம்மைத் தீர்க்கதரிசியாகவும் கடவுளின் வாக்குறுதியை மக்களுக்கு அறிவிப்பவராகவும் நினைத்தவர். நான் மறுபடியும் உங்கள் ஆயுட்காலம் முடிவதற்குள்ளேயே இறந்துபின் திரும்புவேன் என பலமுறை கேட்போரிடம் கூறியுள்ளார். நடந்தது என்ன? 2000 வருடங்கள் கழிந்தபின்னும் திரும்பிவரவில்லை.
இந்துக்கள் கோழைகளா?
“இந்து ஒரு கோழை; முகம்மதியர் இந்துக்களை அச்சுறுத்துபவர்கள்” இதை 29 மே 1924 இளைய பாரதம் இதழில் எழுதியவர் அஹிம்சாவாதி மகாத்மா காந்தி. இந்துக்களை தட்டி எழுப்ப சொல்லப்பட்டதா அல்லது முகம்மதியர்களை மேலும் ஊக்கமூட்டுவதற்கா என்று தெரியவில்லை ஆனால் ஆசிரியர் இந்துக்களின் பலவீனங்களில் கோழைத்தனம் ஒன்றல்ல என்கிறார்
கண்ணனின் அன்பில் கரைந்த கவிமனம்: ரஸ்கான்
ரஸ்கான் குறித்து எழுதப் படும் சில ஆங்கிலப் பதிவுகளில் அவரை ஒரு சூஃபி என்பதாக சித்தரிக்கிறார்கள் (ஹிந்தியில் அவ்வாறு எழுதினால் அது நகைப்புக்குரியதாகக் கருதப் படும்). இதைவிடவும் மோசமாக, கிருஷ்ணபக்தி என்பது சூஃபியிசத்தின் ஒரு பிரிவு என்று தொனிக்கும் வகையில் Krishnite Sufi என்று அடைமொழி வேறு கொடுக்கப் படுகிறது. இது மகா கொடுமை. பக்த சிரோமணியான ரஸ்கான் கோஸ்வாமி விட்டலதாஸரிடம் வைணவ தீட்சை பெற்றவர். அவரது ஆன்மீக வாழ்வு முழு முற்றாகவே வல்லப சம்பிரதாயத்தின் கிருஷ்ணபக்தி மரபுக்குள் வருவது. அதில் சூஃபியிசத்தின் நிழல் கூடக் கிடையாது.