தடக் குறிப்புகள் – 4

This entry is part 4 of 4 in the series தடக் குறிப்புகள்

“எங்களுடைய பாரம்பரிய முறைகள்தான் எங்களைக் காப்பாற்றப் போகின்றன- ஸ்வீட்க்ராஸ், புகைபிடிக்கும் குழாய், நீராவிக் குளியலறை, அவைதான் எங்களைக் காப்பாற்ற முடியும். போதைப் பழக்கமும், போதை மருந்துகளும், வறுமையும் எங்கள் வாழ்க்கை முறையாகிவிட்டன, பண்பாடாகவே ஆகி விட்டன என்கிறார்கள் எங்கள் முதியோர்கள், ஆனால் நாங்கள் அதை மாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன்.” அவர் உற்சாகமாகப் பேசினார். “நாங்கள் எங்கள் பாரம்பரிய முறைகளைக் கொண்டு இதையெல்லாம் மாற்ற வேண்டும். அதற்குத்தான் நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.”

தடக் குறிப்புகள் -2

This entry is part 2 of 4 in the series தடக் குறிப்புகள்

“நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்பா, மகனே. மர லாரிகள் இந்தச் சாலையில் போகிறதே அவங்கல்லாம் உன் மேலே வண்டியை ஏத்திக் கொல்றதுக்குத் தயங்க மாட்டாங்க. நெடுஞ்சாலை 98 இல், ரெண்டு வருஷம் முன்னே ஒரு சைக்கிள்காரர் இப்படித்தான் செத்தார், அப்ப என்ன நடந்ததுன்னு எனக்குச் சரியாத் தெரியாது, ஆனால்-”
நான் அவரைத் தடுத்தேன், என்ன நடந்ததுன்னு எனக்குச் சொல்லாதீங்க, என்றேன்.
“ஆனா, அது நெஜம்மா நடந்தது.”
இந்த சாலைகள் வழியே நான் சைகிள் ஓட்டிக் கொண்டு போகிற போது, அப்போது அங்கே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதில் எனக்குச் சிறிதும் ஈடுபாடு இல்லை என்று சொன்னேன்.

தடக் குறிப்புகள்

This entry is part 1 of 4 in the series தடக் குறிப்புகள்

“சாதாரண மக்களை” பேட்டி எடுத்து, அவற்றை ஒரு டேப் ரிகார்டரில் பதிவு செய்வது நோக்கம். அதன் மூலம் நாட்டின் மாநகர்கள், சிறு நகரங்கள், மற்றும் தொலை தூரங்களில் கிடக்கும் இடங்களின் “பின்னலிணைப்பை”ப் புரிந்து கொள்வது மேம்படும். அமெரிக்கா என்பது என்ன? நம்மை அமெரிக்கர்கள் என்று அழைத்துக் கொள்வதன் அர்த்தம்தான் என்ன? மானியத் தொகையை என் வாழ்வின் அடுத்த ஓரிரு வருடங்களை அமெரிக்காவுக்கான “தேடலில்” செலவிடப் போகிறேன் என்று நான் சொன்னபோது, அந்த மேஜையின் ஒரு கோடியில் அமர்ந்திருந்த ஒருவர் (ஏளனமாக) தன் கண்களை மேல்நோக்கிச் சுழற்றியதை நான் பார்த்தேன். இன்னொருவர் சிரிக்கவும் செய்தார்.

சாதாரணச் சூழ்நிலைகள்

நாங்கள் அங்கிருந்து நீங்கிப் போகையில் அவள் என் கையைப் பற்றிக் கொள்கிறாள். “நீங்க எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறவர்,” அவள் என்னிடம் சொல்கிறாள். “நீங்க நிஜமா அலட்டிக்கிறவர்.”
“நீ ஒரு மண்டு,” நான் பதில் சொல்கிறேன்.
“நீங்க ஒரு மண்டு, ஜடம், அப்புறம் அலட்டிக்கிறவர்.”
அலட்டிக்கிறவர் என்பது அவளுக்குப் பிடித்தமான வசவு.
“நீ ஒரு சாம்பிராணி,” நான் சொல்கிறேன்.
“நீங்க ஒரு போக்கிரி.”
நாங்கள் இப்படியே ஏச்சுகளைப் பரிமாறிக் கொண்டு போகிறோம், நான் அவளைப் பள்ளிக் கூடத்திற்குத் திரும்ப அழைத்துப் போகிறேன். காரை விட்டு இறங்கும்போது அவள் கத்திச் சொல்கிறாள், “நீங்க ஒரு அசடு!” நான் அவளுக்கு ஒரு முத்தத்தைக் காற்றில் வீசுகிறேன்.

ஏட்டுச் சுரைக்காயும், மெக்ஸிக அதிபரும்

ஒரு நிருபர் பென்யா நியதோவிடம் அவரது வாழ்வை மாற்றிய மூன்று புத்தகங்களைக் குறிப்பிடும்படி கேட்டார். அவருடைய தடுமாற்றமான பதில், பின்னால் யு ட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது, முள் முனையில் நிற்பது போன்ற துன்பம் தரும் நான்கு நிமிடங்கள் நீடித்தது. முதலில், அவர் தனக்குப் பிடித்த நாவல்களைப் பற்றி குழறினார், ஆனால் அவற்றின் தலைப்புகள் அவருக்கு நினைவில்லை. அவர் மொத்த பைபிளையும் படித்ததில்லை என்ற போதும், அதில் சில பத்திகள் அவரது இளம்பருவத்தில் மிக நம்பிக்கையூட்டுவதாக இருந்தன என்று யோசித்துச் சொன்னார்.