அது இருளால் செய்த ஒரு வழிச்சாலை!

“என்ன ஒரு மாதிரியா இருக்க!” காலையில் வேலை முடிந்து வந்த பிரேம் முகத்தின் உள்ளேயும் படித்தான்.

“வீட்ல இல்லங்க.”

ஒன்றும் சொல்லாமல் முகத்தைத்தூக்கி வைத்துக்கொண்டு போன பிரேமை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தாள் ரேணு.

இப்போதெல்லாம் அடிக்கடி அவன் பேசும்போது குழந்தையை பற்றிய பேச்சு அதிகமாக இருக்கிறது. அவளை விட அவனுக்குத்தான் எதிர்பார்ப்பு அதிகம்.