வெயில் காயும் நேரத்தில், வீதியொன்றின் திருப்பத்தில் நின்று கிரேக்கர்களின் மலைக்கோட்டையைக் காணும்போதெல்லாம், மிகக் கச்சித்தமாகவும் நேர்த்தியாகவும் அதனுள் கட்டி எழுப்பப்பட்ட நகரம் ஒரு பூத்த மலர்போலவும், அந்நகரத்துடன் இணைந்திருக்கும் மலை தண்டுடன் கூடிய புல்லிவட்டம் போலவும் தோற்றம் தரும். இழப்பீடற்ற அச் செடியை வரையறுக்க ‘ பூரணம்’ என்ற வார்த்தைமட்டுமே பொருத்தமானது. அப்பழுக்கற்ற அவ்வடிவம் பெருவெளியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், கால அளவின் ஒரு குறிப்பிட்டத் தருணத்தில்…