கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் 2.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் உருவானார்கள் என்று இன்றைய அறிவியல் கருதுகிறது. இன்றைய மனிதர்களுக்கு ஒப்புமை சொல்லும் வகையில் ஒத்த, உடல் எழும்பி நேராக நிற்கும் (Homo Erectus) விரைப்பானத் தன்மை கொண்ட வகையினர் அவர்கள். தொன்மையான மனிதர்களின் அழிந்து பட்ட உயிரினம் இந்த ‘ஹோமோ எரெக்டக்ஸ்.’ கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து உலகின் பல பாகங்களுக்குப் பயணம் செய்து அவர்கள் பல்வேறு வகையில் ஒத்த இனங்களாக, ஆசியாவில் நியண்டர்தால்களைப் போல் பரிணாம வளர்ச்சி பெற்றார்கள். இன்றைக்கு மூன்று இலட்சம் வருடங்களுக்கு முன் வரை ஹோமோ சேபியன்ஸ் அல்லது இன்றைய நவீன மனிதன் தோன்றியிருக்கவில்லை.