சொல்லென்றும், மொழியென்றும்…

ஒற்றை மொழி பேசுபவர் இந்த முனையில் இருக்கிறார் என எடுத்துக் கொள்வோம். ஒப்புமை கொண்ட பேச்சொலிகள் இரண்டு மொழிகளிலும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. முதல் ஒரு முனை பேச்சின் (மொழியின்) ‘ஆடியோ கோடெக்’ மாதிரியிலிருந்து, ஒலிக்குறி தூண்டுதல்களைப் பெற்று, மறுமுனையில், அந்த மொழியின் ஒலிக்குறிப்பை வால் ஈஎக்ஸ் தந்துவிடுகிறது. (Coding) அந்த இடத்திலே குறி விலக்கி, செயல்படும்; மறுமுனையில் உள்ள மொழியில் இந்தப் பேச்சு பெறப்படும்.(Decoding) ஒரே பேச்சாளர்களின் மாற்று மொழித் தகவல் தரவுகள் இதற்குத் தேவையில்லை. சொல்லும் சூழலைப் பொறுத்து, அதன் தொனியை இது புரிந்து கொண்டு விடுகிறது

மாயம் & இயலாச் சொல்

என் குரல் நாண்களின்
இடை வெளியில் இன்னமும்
நீங்கள் கேட்காத சொற்கள்
சிற்சிறு தூளிகளில் தொங்குகின்றன
எண்ணிக்கை ஓங்குகையில்
உடல் குறுக்கி அமர்ந்திருக்கும் சில
பாதம் நீட்டி படுத்திருக்கும் சில
முகம் காட்டி கண் மூடியிருக்கும் சில
கைகள் வெளிப்போந்திருக்கும் சில
திமிறி வரத் தெரியாதவை
உள்ளேயும் புதைக்க இடமில்லை

காணொளிகளின் கொண்டாட்டம், திண்டாட்டம்

2018 முதல் காணொளிகளைத் திருத்தம் செய்யும் இந்த நிறுவனத்தின் பல செயலிகள், டிக்டாக், வலையொளி, (Youtube) திரைப்படங்கள், தொலைக்காட்சி படைப்புகள் போன்றவற்றிற்கு முக்கிய வரமாக இருந்து வருகின்றன. ‘த லாஸ்ட் ஷோ வித் ஸ்டீபன் கால்பேர்ட்’ (The Last show with Stephen Colbert) படத்தின் வரைகலையில், ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All At Once) என்ற படத்தின் அசத்தலான காட்சித்  தாக்கத்தில் இவர்களின் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

 நீதி வழுவா நெறிமுறை

எக்ஸ் :அப்ப, ஜன நாயகம் படுத்துருதில்ல. அப்பன், ஆத்தா, மகன், மகள், மருமகங்க, பேரன், பேத்தி, மச்சினன், நாத்தானாருன்னு குடும்ப நாயகம்தான நாடு பூரா நடக்குது.
வொய் : எல்லா ஸ்டேட்லயுமா அப்டி நடக்குது?
எக்ஸ் : அதுவாய்யா கேள்வி? முக்காவாசி அப்படித்தான் நடக்குது. வொறவுமுறயில கண்ணாலம் கட்டி சொத்த பெருக்கறமாரி, நாட்ட இவனுங்களே கூறு போட்டுக்குறாங்க. இத விட நீதிபதிகள அமத்தறதுல கூட சொந்த பந்த நீக்குப் போக்கு நடக்குது.

இனத் தொடர்ச்சி எனும் இச்சை

அச்சமயம் முன்னர் வந்த பெருங்காகம் எங்கிருந்தோ பறந்து வந்து புறாக்களை விரட்டும். இதில் நாங்கள் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்- முன்னர் தானியம் கொத்திய பறவைகள் இன்று நொறுக்குத்தீனி கேட்கின்றன. சில இயல்பாகவே தன் பசியை மட்டும் தீர்த்துக் கொள்கின்றன. சில உணவிடுவோருக்கும், உணவை உண்ண வரும் போட்டியாளருக்கும் ஒரே மாதிரி பயப்படுகின்றன. தான் மட்டுமே சாப்பிட்டாலும், தன் இனத்தைச் சேர்ந்த ஒன்றிற்கு உணவு கிடைக்கவில்லையெனில் பகையைப் போராடி துரத்தும் இன உணர்வும் இருக்கிறது.

காலம் தோறும் முரலும் குரல்கள்

பல யுகங்களாக ஆண்களின் கட்டளைகளுக்கு உட்பட்டு உலகின் அத்தனைச் செயல்களையும் செய்யும் பெயரில்லாத பெண்குலம் ஒரு சிறு நன்றிக்குக்கூட உரித்தாகாமல் போவது பெரும் துயர்.‘மறந்து விடு’ என்பது அவளுக்குச் சொல்லப்பட்டாலும், ‘நினைவில் இருத்து‘ என அவள் அதைப் புரிந்து கொள்கிறாள். கூடடையப் பறவைகள் சிறகெழுப்பி பறந்து உல்லாசமாக வருகையில் அவை வலையில் அகப்பட்டு காற்றில் ஊசலாடும் கால்களில், கழுத்தில் இறுகும் முடிச்சில் பெயரற்று, புகழற்று, இருந்த நினப்பற்றும் போவதைப் போல் உலகில் பெண்களின் நிலையிருக்கிறது என்பது அந்த மூவரின் பார்வையின் மையச் சரடு.