இன்று நேற்று நாளை 

மகாபாரதக் கதை ஒன்று. அரசுக் கட்டில் யாருக்கு என்பதில் பெண்களிடையே நடக்கும் மௌன யுத்தம். குந்திக்குக் காட்டில் யுதிஷ்டிரன் பிறந்து விடுகிறார். செய்தி கேட்ட காந்தாரி தன் வயிற்றை ஓங்கி அறைந்து கொள்ள நிணமும், இரணமுமாக வெளி வரும் சிசுப் பிண்டங்களை நூறு பானைகளில் பிடித்து கௌரவர்களாக வளர்த்து எடுக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டியது மாயத் தன்மைகளையும், மனிதர்களின் குணங்களையும் மட்டுமே. 

நீலச்சிறுமலர்-ஸ்வேதை

தாவரவியல் சுவாரஸ்யமானதும், அதன் அடிப்படைகளையாவது அனைவரும் அறிந்து கொண்டிருக்க வேண்டியதுமான இன்றியமையாத ஒரு துறை. அதிலும் தாவர அறிவியல் பெயர்களும் அவற்றின் பொருளை அறிந்து கொள்ளுவதென்பதும் மிகமிக சுவாரஸ்யம். ஒரு தாவரத்தின் வட்டார வழக்குப்பெயரானாலும், ஆங்கிலப் பொதுப்பெயரானாலும், லத்தீன் மொழியிலான தாவர அறிவியல் பெயரானாலும் சரி ஒவ்வொன்றும் மிகச்சுவாரஸ்யமான “நீலச்சிறுமலர்-ஸ்வேதை”