வானில் தெரிவதற்கெல்லாம் பால் வெளிதான் வீடு என்று நினைத்திருந்தோம். நியூட்டனின் ஈர்ப்பு விதிகளின்படி அகிலம் மாறுதலற்றது, தொடர்வது, எப்போதுமே நிலை பெற்றிருக்கக்கூடும் என எண்ணினோம். ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பியல் கோட்பாடு காலவெளி நெசவைச் சொன்னது. அவரது கண்டுபிடிப்பு, பேரண்டம் மாறுதலுக்கு உட்பட்டது என்பதைச் சொன்னதோடு நில்லாது கருந்துளைகளை அனுமானித்தது. தற்போதைய அறிவியல் யூகித்துச் சொல்வது என்னவென்றால் இந்த புவனம் கருந்துளையில் இருந்து பிறந்துள்ளது என்பதே.