மின்சக்தி உற்பத்தியில் கரி மிகவும் மலிவான மூலப்பொருள். பல நாடுகள், கரியை நம்பிய நாடுகள். அனல் மின் நிலையங்களை மூடினால், தகுந்த மாற்று அமைப்பு உருவாக்குவது மிகவும் கடினமான விஷயம். உதாரணத்திற்கு, சமீப இந்திய மின்சார விரிவாக்கம், பெரும்பாலும், இயற்கை வாயுவை மூலமாகக் கொண்டது. சைனா, இன்னும் தன்னுடைய ராட்சச கரி சார்ந்த மின் நிலையங்களை மூடத் தொடங்கவில்லை. சொல்வது எளிது. ஆனால், செய்வது மிகவும் கடினம். நீர், காற்று மற்றும் சூரிய ஒளி குறைந்த பகுதிகள், அணு மின் நிலையம் ஒன்றே வழி. இதற்கான முதலீடு அதிகம்
Tag: புவி சூடேற்றம்
அசைவத்தை ஏன் கைவிடல் வேண்டும்?
நம்பிக்கையூட்டும் பூச்சுற்றல் அல்ல இது. இவர் சொல்லும் புள்ளி விவரங்கள் மற்றும் தீர்வுகள், இரண்டையும் இந்தப் பகுதியில் பார்ப்போம். என் அனுபவத்தில், முதன்முறையாக, ஒரு ஆவணப்படத்தைப் பல முறை பார்த்ததோடு, உட்கார்ந்து குறிப்புகளும் எடுத்துக் கொண்டேன். இந்தக் கட்டுரைக்காக அதைச் செய்தேன் – ஆவணப்பட இயக்குனராக அல்ல!
புவி சூடேற்றம் பாகம்-13
50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், மனிதர்கள் இந்த பூமியில் இல்லை. உயிர்கள் தழைத்தன என்பதை எதை வைத்துக் கொண்டு சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. இன்றைய தொல்லெச்ச எரிபொருள்கள் உருவாவதற்குக் காரணமே, அந்த காலங்களில் மறைந்த உயிர்களே!
புவி சூடேற்றம் பற்றிய திரிபுகள்
இந்த 150 ஆண்டுகளில், 8 மிகப் பெரிய எரிமலை வெடிப்புகள் விஞ்ஞானிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன. எரிமலை வெடிப்பினால், கரியமில வாயு அதிகமாகிறது என்றால், இரண்டு வெடிப்பிற்கு இடைப்பட்ட காலத்தில், பூமி குளிரவேண்டும் அல்லவா? அப்படி நிகழவில்லை. மாறாக, பூமியின் சராசரி வெப்பம், கடந்த 150 ஆண்டுகளாக, சீராக உயர்ந்து வருகிறது. மனித நடவடிக்கைகள்தான் இதற்கு காரணம் என்பது தெளிவாகிறது.
விஞ்ஞானத் திரித்தல்கள் – புவிச் சூடேற்றம் –பகுதி 10
கடந்த ஐம்பது ஆண்டுகளாக, புவிச் சூடேற்றம் பற்றி விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தாலும், பெரிதாக, இந்த உலகம் எதையும் மாற்றவில்லை. மாறாக, தொல்லெச்ச எரிபொருட்களுக்கு மேலும் அடிமையாகிக்கொண்டே வந்துள்ளது. விஞ்ஞானிகளின் பார்வையில், நேரம் சற்று கடந்துவிட்டாலும் இன்று தொடங்கி மனித இனம் தன்னைக் காப்பற்றிக் கொள்ளமுடியும்வ்
மனிதரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள்
கடலில் வாழும் உயிரினங்கள், இந்தச் சூடான கடலில் வாழப் பழக்கப்படுத்திக் கொள்கின்றன. இல்லையேல் மடிய வேண்டியது தான். சில சின்ன உயிரனங்கள், பெரியவற்றை விட, மிகவும் பாதிக்கப்படுகின்றன. துருவப் பகுதிகளில் வாழும் krill போன்ற சின்ன உயிரினங்கள், இந்தச் சூடேற்றத்தால், 80% வரை மறைந்து வருகின்றன. இந்தக் கடல் உணவுச் சங்கிலியின் ஆரம்பத்தை, மனிதன், வெற்றிகரமாக அதனருகே கூடப் போகாமல், அறுத்து விட்டான்
புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5
மனிதனின் மிகப் பெரிய தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜனத் தொகைக்கு உணவு உற்பத்தி செய்வது. நிலத்தில் உள்ள நீரில் 70% விவசாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் உணவில் 25% முதல் 30% வரை, பயனில்லாமல் போகிறது. குறிப்பாக, சமைத்த உணவு, பயனில்லாமல் போவது சுற்றுச்சூழலுக்கு நல்லது அல்ல. அதிலிருந்து உருவாகும் மீதேன் போன்ற வாயுக்கள் மேலும், புவி சூடேற உந்துகின்றன
பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்
காற்றுமண்டலத்தின் ஒவ்வொரு அடுக்கையும் வைத்துப் பார்த்தால், நம்முடைய நிலத்தளவு வெப்பம் சராசரி -15 டிகிரியாக இருக்க வேண்டும். எப்படி 15 டிகிரியானது? இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கிய காரணம், உலகின் மிக முக்கிய சூடேற்றும் வாயுவான நீராவி. மேகங்கள் (நீராவி) நம் பூமி, உறையாமல் இருக்க முக்கிய காரணம்.
புவிச் சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 3
நதிகளின் வண்டல்படிவுகள் (sediment deposits) , பயிர்கள் செழிக்க மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அணைகள், நீர்பாசனத்திற்கு உதவினாலும், அதன் மிகப் பெரிய பின்விளைவு வண்டல்படிவுகளில் கை வைப்பதுதான்.
பனிப்பாறை உருகல்கள்: உலகம் வெள்ளத்தில் மூழ்குமா?
ஆர்க்டிக் பகுதிகளில் ஜூன் மாதத்தில் கடல், பனிப்பாறைகளால் மூடப்பட்டிருக்கும். செப்டம்பர் மாதம்தான் இங்கு அதிகமாகப் பனி உருகும். மீண்டும் அக்டோபர் கடைசியிலிருந்து உறையத் தொடங்கும். 1967 முதல் 2018 வரை, ஜூன் மாதப் பனியுறைப் பகுதி குறைந்துகொண்டே வந்துள்ளது. 1967–ல் இருந்த உறைந்த பகுதியிலிருந்து, 2018–ல் நாம் இழந்த பனியுறைப் பகுதி 2.5 மில்லியன் சதுர கி.மீ. இது சாதாரண இழப்பன்று. இது இந்தியாவின் நிலப்பரப்பில் 76%-திற்குச் சம்மானது!இந்த இழப்பைப்பற்றி எவரும் கவலைப்படுவதில்லை. ஆனால் ஏன் கவலைப்படுவதில்லை?