விடுப்பு

அவளது மாமியார் ஏற்கனவே தனது கூச்சலால் அண்டைவீட்டார் பலரை கூட்டியிருந்தாள். ராதா அசையாமல் இருந்தாள். அவள் தண்ணீரை உற்றுப் பார்த்தபடி அமைதியாக இருந்தாள்.
புன்தி, பொஜுரி, காலிஷா, கஜோலி ஆகிய வகை மீன்குட்டிக் கூட்டமொன்று அவளது பாதங்களை மொய்த்தன. ‘ஓ, தயவு செய்து தூரப் போங்கள், இன்று நான் உங்கள் யாருக்கும் உணவு கொண்டு வரவில்லை.’ ஆனாலும் அவளின் பாதத்தை சுற்றி மகிழ்ச்சியாய் அவை பல்டியடித்துக் கொண்டிருந்தன. தங்களுக்கு அருகில் ராதா இருப்பது அவைகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவைகள் அதைவிட வேறெதுவும் கேட்கவில்லை.