கடலில், நம் முந்தைய அட்டூழியங்களின் தாக்கங்கள் யாவும் வெப்பமாகத் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. தேக்கி வைத்த வெப்பம், முதலில் வெளி வந்தால்தான் குளிர்வதற்கு சந்தர்ப்பம் இருக்கும். கடந்த 50 ஆண்டு கால தொல்லெச்ச பொருட்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டால், 2100 ஆம் ஆண்டு வரை, குளிர்வதற்கான வாய்ப்பே இல்லை. பூமி, நாம் தொல்லெச்ச பயன்பாடு எல்லாவற்றையும் நிறுத்தினாலும், தொடர்ந்து 2100 –ஆம் ஆண்டு வரை வெப்பமாகிக் கொண்டே போகும். அடுத்த 80 ஆண்டுகள் பொறுப்பாக நாம் இருந்தால், 2100 –க்குப் பிறகு, பூமி குளிர வாய்ப்பு இருக்கிறது.