யாயும் ஞாயும்

தன் அந்தரங்கத்தைப் பேண விரும்பும் மனிதர்களால் கொண்டாடப்பட்ட ஒன்று 1993-ல் ஸ்டீபன் லெவி (Stephen Levy) ‘வொயர்ட்’டில் (Wired) எழுதிய கட்டுரை : “குறியீட்டு ஆர்வலர்கள் காணும் கனவு- எந்த ஒரு மனிதனும், அது அவனது மருத்துவ நிலையாக இருக்கட்டும், அல்லது கருத்தாக இருக்கட்டும், அவனாக விரும்பினாலொழிய அதைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படக் கூடாது; வலையில் உலவும் தகவல்களைக் கொத்தக் காத்திருப்பவர்களுக்கு அவை புகை மூட்டங்களாகிக் கரைந்துவிட வேண்டும்; உளவுக் கருவிகளே பாதுகாக்கும் கருவிகளாக வேண்டும்.”

வெப் -3 (Web-3)

க்ரிப்டோவின் கவர்ச்சியால் ஈர்க்கப்படும் தொழில் நுட்ப வல்லுனர்களைத் தக்க வைப்பது பல பெரும் இணைய நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கிறது. அத்தகைய வல்லுனர்களை இருத்தி வைப்பதற்கும் அவர்கள் இலக்க நாணயக் குழுமங்களில் வேலை தேடிச் செல்லாமல் இருப்பதற்கும், கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை ஒவ்வொரு திங்களன்றும் தன் உதவியாளர்களான பல நிர்வாகிகளுடன் விவாதிக்கிறாராம். கூகுளின் எந்தப் பிரிவில் பணியாற்றுபவர்கள் இந்தக் கவர்ச்சிக்கு உள்ளாவார்கள் என அறிந்து அவர்களுக்கு கம்பெனியின் பங்குகள் சற்று அதிகமாக வழங்கப்படுகிறதாம்.

ப்ளாக் செயின் – ஓர் எளிய அறிமுகம்

தொகுப்புச் சங்கிலி மிக மிக பாதுகாப்பானது. இது கட்டாயம் மோசடி மற்றும் கையாடலைக் கணிசமாகக் குறைக்கும். தரவுகளில் திருத்தம் செய்வது மிகக் கடினம். மேலும் எல்லா பரிமாற்றங்களும் ஒரே பேரேட்டில் சேமிக்கப்படுகிறது. பரிமாற்றங்கள் இடைத் தரகர்கள் மற்றும் மூன்றாம் தரப்புகளின் தேவையை முழுவதும் இல்லாமல் செய்துவிடும்.
தொகுப்புச் சங்கிலி தொழில்நுட்பம் இன்றுள்ள தொழில்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். உதாரணமாக நிதித் துறை, நீதித் துறை, கல்வித்துறை, இசைத்துறை என பல துறைகளில் மாற்றமும் முன்னேற்றமும் வருவதைத் தடுக்க முடியாது.