புன்னகைக்கும் அப்பா

அம்மா அப்படி கேட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அம்மாவை பொருத்தவரை பஸ், ரயில், ஆட்டோ… ஏன்,   ஸ்கூட்டரில் வந்தால் கூட  அதையே தான் கேட்டிருப்பாள். அப்பாவுக்கு சைக்கிள் விட தெரியாது. அவர் கூட எங்கு போனுனாலும் நட பயணத்தில் தான். அதனால் அம்மாவுக்கு நடக்கிறத தாண்டி எல்லாமே கார் பயணம் என்றாகிவிட்டது.

மௌனத்தின் மெல்லிய ஓசை

அல்வா எனக்குப் பிடிக்காது, எனக்கு வேண்டா, ‘நீ சீக்கிரம் வாம்மா நாம்ப போவோம்’ என்றபடி வெளியே ஓடினான் நடுவுள்ளவன். அவனுக்கு பஸ்ஸில் வெளிவூருக்குச் செல்லப்போகும் சந்தோசம். காலரில் மஞ்சளிட்ட புது சட்டையை மாட்டிக்கொண்டு தயாராக நின்றான்.

அப்பயி ஏமாற்றினாள்

தீடிரென நினைவு வந்தாற்போல எழுந்து கொல்லைப்புறம் சென்று வந்தான். அவசரமாக கைலியை உதறிவிட்டு பேண்ட் மாட்டிக் கொண்டான். பித்தான்கள் மாற்றி பூட்டப்பட்ட சட்டை மேலும் கீழுமாக இருந்ததை அவன் அறிந்தானில்லை. பையில் அப்பயி மூன்றாக மடித்து சுருட்டி தந்த ஒரு புது இருபது ரூபா தாளும், கசங்கிய பத்து ரூபா தாளும் இருந்தது.

சிந்திய ரத்தத்தில் ஒரு ஓவியம்

உற்று பார்த்து உச்சரித்தான் a….v…. o…. n. புதிதாக இருந்தது அதன் பெயர். அது அவன் கேள்விக்கும் அப்பால் இருந்தது. பள்ளிக்கூட ஸ்டாண்டில் நிற்கும் எல்லா சைக்கிள்களின் பெயர்களை தெரிந்திருந்தான். அவைகளில் ஒன்று கூட Avon என்ற பெயரில் படித்த நினைவில் இல்லை.

நேர்த்திக் கடன்

கொடிகளில் ஆடிய கலர் கலரான தொப்பிகள் என்று விஸ்தாரமாக விரிந்து கிடந்தது ஊர் கடை தெருவு. இத்தாம் பெரிய ஊரா நம்மூரு என்பது அவனுக்கு பிரமிப்பாக இருந்தது. அத்தனை பெரிய கடை தெருவில் தொப்பிகள் மீது மட்டும் அவன் கண் இருந்தது. தொப்பிகளை கண் இரைப்பைகள் விம்ம விழுங்கி கொண்டிருந்தான். மனதில் சட்டென ஒரு ஆசை. ஒரு தொப்பி வேணும்! அதோ அந்த தொப்பி தான். கருப்பு கலர்ல.

அமுதா அக்கா

நல்லா இருக்கியா… நல்லா இருக்கியானு கேட்டுக்கொண்டே இருந்த அக்காவிடம் நீ நல்லா இருக்கியா என்று நான் திருப்பிக் கேட்டவேயில்லை. அப்படிக் கேட்பது அக்காவின்மேல் தொடுக்கும் வன்முறை என்று நினைத்துகொண்டேன்.
… நல்லா இருக்கேன்க்கா.