பட்டாவளி

இப்போதும் ஒன்றும் தாமதமாகவில்லை. கைவசம் அவர்களைத் தொகுத்துக் கொண்டால், இந்த இதழில் எவரெவரைத் தவற விட்டோமோ, அவர்களை வரும் வெளியீடுகளில் கவனிக்கலாம். வரும் வாரங்களில் வாசிக்க எடுத்து வைக்கலாம். குறைந்த பட்சம் மற்றவர்களையாவது படிக்குமாறு தூண்டலாம்.இதுதான் இந்த பட்டியல் பதிவின் குறிக்கோள்

உண்மைகள் எளிதானவை- பாவண்ணன்

தாய்மொழிப்பயிற்சி உள்ள ஏராளமான பள்ளிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளன. ஒரு மாநிலத்தில் இயங்கக்கூடிய தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையையும் அரசு பள்ளிகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலேயே இதைப் புரிந்துகொள்ளமுடியும். அங்கெல்லாம் மாணவமாணவிகள் தாய்மொழியில்தான் படிக்கிறார்கள். எதிர்காலத்தைப்பற்றிய அச்சத்தைத் துறந்துவிட்டு தாய்மொழியில் படிக்கும் அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான தூண்கள். அவர்கள் வழியாக தாய்மொழிகள் கண்டிப்பாக வாழும்.

பருவம் – சகாப்தத்தின் குரல்கள்

This entry is part 1 of 48 in the series நூறு நூல்கள்

மகாபாரதம் என்ற இதிகாசத்தின் பாதிப்பு இல்லாத இந்திய எழுத்தாளர் இல்லை. இன்றும் கதை கூறும் முறையில் மாகாபாரதமும், இராமாயணமும் முக்கியப் பங்கை வகிக்கின்றன என்றாலும் மகாபாரதம் இலக்கியங்களில் அதிகமாக இடம் பெறும் ஒன்று. தமிழில் பாரதியார் துவங்கி ஜெயமோகன் வரையில் அதை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். பருவம் என்பதை பல “பருவம் – சகாப்தத்தின் குரல்கள்”

இனிய நினைவு

இயற்கையிலேயே மகாபாரதக் கதையின் மீது எனக்கிருந்த ஆர்வமே பர்வ நாவலை மொழிபெயர்த்ததற்கான முதல் காரணம். பைரப்பாவின் கதைப்பின்னல் எப்போதும் உணர்ச்சிகரமானதும் வேகமும் கொண்டது. அதன் மீது எனக்கு எப்போதும் விருப்பமுண்டு. எங்கோ நடைபெற்ற கதையாக அன்று, நம் கண் முன்னால் நடைபெறுகிற ஒரு கதையாக நம்பகத் தன்மையுடன் அவர் படைப்புகளைப் படிக்கலாம்.

தரிசனம்

“அப்பா என்ன பண்றாரு?”
“அப்பா இல்லைங்க மேடம்”
“உயிரோட இல்லயா?”
ஒரு கணம் தயங்கி “எங்களோடு இல்ல மேடம். எனக்கு எட்டு வயசு இருக்கும்போதே அவர் அம்மாவ விட்டுட்டு வேற ஒரு பொண்ணுகூட ஊரவிட்டே போயிட்டாரு.”
“கூடப் பொறந்தவங்க?”
“ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க”
“படிக்கறாங்களா?”
“பெரிய தங்கச்சி சரஸ்வதி. கடைசி வருஷம் இஞ்சினீரிங் படிக்கறா. சின்ன தங்கச்சி லட்சுமி. பாரதிதாசன்ல பிகாம் படிக்கறா”
“நீதான் படிக்க வைக்கறியா?”
“ஆமாம் மேடம். ரெண்டு பேரும் சூப்பரா படிப்பாங்க. இங்க்லீஷ்ல நல்லா வெளுத்துக் கட்டுவாங்க.”

முறிமருந்து

வைத்தியர் முதலில் நாலைந்து இலைகளை எடுத்த வேகத்தில் பரிசோதித்துவிட்டு உதட்டைப் பிதுக்கி ஓரமாக ஒதுக்கினார். அடுத்து எடுத்த இலையைப் பார்த்ததுமே அவர் முகம் மலர்ந்தது. திருப்பித் திருப்பி இரண்டு மூன்று முறை பார்த்துவிட்டு “இதான் ஆயா. இதுவேதான். சரியா கண்டுபுடிச்சிட்டிங்க” என்று சிரித்தார். அப்புறம் அவர் கூடையிலிருந்து எடுத்ததெல்லாம் அதேபோன்ற இலைகள். திகைப்பும் மகிழ்ச்சியும் அவர் முகத்தில் மாறிமாறி எழுந்தன.
“ஆயா, அற்புதம். கடவுள் கண்ண தெறந்துட்டாரு. ஆரம்பத்துல அலய விட்டாலும் கடைசியில சரியான எடத்துக்கு கைய புடிச்சி அழச்சி வந்துட்டாரு. ஒங்க குடும்பத்துக்கு நான் எப்பிடி நன்றி சொல்றதுன்னே புரியல” வைத்தியரின் குரல் குழறியது.

கூம்பிய கனவுகள்

சொல்வனம் இதழில் பாவண்ணனின் சிறுகதை “கனவு மலர்ந்தது” படித்தேன். வாசித்து முடித்தவுடன் ஒரு சாதாரண சிறுகதையாகத்தான் தெரிகிறது. நாடகம் என்ற கலையின் வீழ்ச்சியைச் சொல்வதாக இருக்கிறது. நாடகம் என்ற வடிவம் இன்னும் இருக்கத்தானே செய்கிறது; நகரங்களில் சபாக்களில் இன்னும் கூட நடத்தப்படுகின்றனவே என்று சொல்லலாம். ஆனால்…

கனவு மலர்ந்தது

“சோமு, நாடகம்ங்கறது ரெண்டுமூனு பேரு நின்னு விளையாடி ஜெயிக்கற எடம். சினிமாங்கறது பெரிய குருச்சேத்திரம். வெறும் அஞ்சி பேரு ஜெயிக்க பதினோரு அக்ரோணி சேனைங்க சாவணும். இதெல்லாம் தேவையா சோமு.”

பாவண்ணனின் ‘கிருஷ்ண ஜெயந்தி’ – அழியாத வெண்பாத சுவடுகள்

கர்ணன் பற்றி அறிய வேண்டுமெனில், ‘கர்ணன்’ திரைப்படம் சிறந்த தேர்வன்று என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய தவறான தேர்வுகளே தர்மம் உள்பட சரியான கற்பிதங்களைத் திசை திருப்பி விட்டுவிடுகின்றன. தர்மம் என்னும் பெயரில் அதர்மம் போலி வேஷம் கொண்டு திரிவதை உலகம் பாராட்டுவதால் தர்மம் என்ற பொருள் திரிந்து விடுவதில்லை.

உத்தமன் கோவில்

முன்புறமாக ஊன்றிய இரு கைகளும் பின்புறமாக ஊன்றிய இரு கால்விரல்களும் மட்டுமே உடலின் எடையைத் தாங்கிக்கொள்ள நடுவில் ஒரு பலகைபோல நீண்டிருந்தது அவர் உடல். பிறகு இடைவரை தரையில் படிய இடைக்கு மேலான உடலை வளைத்து வானத்தை அண்ணாந்து பார்த்தது அவர் முகம். அதுவும் ஓரிரு கணமே. மீண்டும் வளைந்து பாதங்களை கைகள் பற்றியிருக்க உடல்மட்டுமே நிமிர்ந்தது. தொடர்ந்து கூப்பிய கைகளுடன் சூரியனை நோக்கிய நிலைக்குத் திரும்பினார்.

கிருஷ்ண ஜெயந்தி

டாக்டர் எங்களைக் கூட்டமாகப் பார்த்ததும் படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளை கீழே தாழ்த்தியபடி “என்னடா, நீங்களும் இந்தி ஒழிக, தமிழ் வாழ்கனு ஊர்வலம் கெளம்பிட்டிங்களா? எல்லாத்துக்கும் காரணம் இந்த பக்தவச்சலம் செஞ்ச வேல,” என்றார். சற்றே தாமதமாகத்தான் எங்களிடமிருந்து அவர் பார்வை விலகி மாமியின் மீது படிந்தது. அவர் தோற்றத்தைப் பார்த்ததுமே “தம்பிங்களா, கொஞ்சம் வெளியே நில்லுங்க,” என்று எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டார்.

ஆனந்த நிலையம்

“கெழவனும் கெழவியும் இருக்கறவரைக்கும் யாரும் எதுவும் பேசல. ரெண்டு பேரும் மண்டய போட்டதும், எல்லாருக்கும் சொத்து ஞாபகம் வந்துட்டுது…”
“சாகறதுக்கு முன்னால யாருக்கு என்ன உண்டோ அத பெரியவரே சுமுகமா பிரிச்சி குடுத்திருக்கலாம்ல?”
“அதான் பெரியவங்க செஞ்ச பெரிய தப்பு. கடசி மூச்சு இருக்கறவரைக்கும் அவரும் அத செய்யல. இவரும் அத பத்தி ஒரு வார்த்த கூட வாயத் தெறந்து கேக்கல. கேளுங்க கேளுங்கன்னு இவருகிட்ட தலபாடா அடிச்சிகிட்டன். நீ சும்மா இரும்மா, என் கூட பொறந்தவங்கள்ளாம் அப்பிடி இல்லம்மா. எல்லாருமே சொக்கத்தங்கம். எதுவும் கேக்கமாட்டாங்க. எல்லாருமே அந்த நாட்டுல ஊடு பங்களானு இருக்கறவங்க, இதுக்கு போயி பங்குக்கு வரப்போறாங்களான்னு மெதப்புலயே காலத்த தள்ளிட்டாரு. இப்ப என்ன சொல்றாங்க தெரியுமா?”

உயர்ந்த உள்ளம்

This entry is part 24 of 48 in the series நூறு நூல்கள்

பிரசவத்துக்குக் காத்திருக்கும் மனைவியைப் பார்க்கவும் அவளோடு வாழவும் வேலையைத் துறந்து செல்லும் அவனுக்கு உள்ளூர உதவவேண்டும் என்பதுதான் ஜெனரலின் விருப்பம். ஒருவேளை தான் மரணமடைந்து, வேறொரு ஜெனரலின் கட்டுப்பாட்டுக்கு அவன் சென்றுவிட்டால் விடுவிப்பில் சிக்கல் நேரிடலாம் என்னும் முன்யோசனையாலேயே அவர் அக்குறிப்பை எழுதி அனுப்பியிருக்கிறார். உயிருக்குப் போராடும் நேரத்திலும் இன்னொரு உயிருக்காக இரக்கப்படும் உயர்ந்த உள்ளத்துக்கு மட்டுமே அது சாத்தியம். அதுவரை உயர்ந்த சிகரத்தைப்பற்றிய கதையாக இருந்த விவரணைகள் எல்லாமே உயர்ந்த உள்ளத்தைப்பற்றியதாக மாற்றம் பெற்றுவிடுகிறது.