இந்த வினோ கேட்டதுதான் பாலுவுக்குப் புரியவில்லை. கற்றலில் தனியாள் வேறுபாடுகள் வகுப்பு முடிந்து வெளிவருகையில் நடைபாதை தூணுக்கருகில் புத்தகத்தைக் கையில் பிடித்தபடி குனிந்து சேலையில் விசிறியிலை மடிப்புகளை உதறி விட்டுக் கொண்டிருந்தாள். வந்து அவனுடன் இணைந்து நடந்தபடி , “இப்படி ஒவ்வொரு குழந்தையும் அதுக்குரிய வேகத்திலயும்,விருப்பத்திலயும், மரபியல் கூறுகளின் அடிப்படையிலதான் கத்துக்குது. அப்படின்னா. . . நல்லாபடிக்கறவங்களுக்கு, சுமாரா படிக்கறவங்களுக்கு, மெதுவா படிக்கறவங்களுக்கு தனித்தனி கிளாஸ் இருக்கறது தப்பில்லயே?”
“வெறுமனே படிக்க மட்டுமா பள்ளிக்கூடம்”