கலா ஷஹானியைப் போன்று மானிட மதிப்பீடுகளில் அளப்பரிய நம்பிக்கை கொண்டோருக்கு நாட்டிற்காக, அதன் விடுதலைக்காகப் போராடியதும் தான் வரித்துக் கொண் ட மதிப்பீடுகள் சார்ந்து வாழ்வதும் அரசியல் செயல்பாடல்ல; மாறாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்து அவர்களின் ஆளுமையையும் வாழ்க்கை முறையையும் உருவாக்கிய ஓர் ஆன்மீகத் தேடல். அவர்கள் சுய லாபத்தையோ அங்கீகாரத்தையோ கருதாமல் தேசத்திற்குத் தொண்டாற்றுவதையு ம் சில மதிப்பீடுகளுக்காக வாழ்வதையுமே இலட்சியமாகக் கொண்டவர்கள்.
Tag: பாரதி கபாடியா
தனியாய் ஒரு போராட்டம்
முஸ்லிம்கள் தனக்கு அளித்த உதவிகளை பற்றிச் சொல்லிக் கொண்டு வருகையில் கலா அவர்கள் தன்னிடம் கேட்ட பல கேள்விகளையும் பற்றி நினைவுகூர்ந்தார். “நீங்கள்—ஹிந்துக்கள்— ஏன் எங்களை வெறுக்கிறீர்கள்? உங்கள்மேல் எங்களுக்கு எந்தவித வெறுப்பும் இல்லையே?” அவர் அதற்கு முன்பும் அதன் பின்பும் அளித்த—-அவரது இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்த— பதிலைத்தான் அப்போதும் அளித்தார். “நாங்கள் உங்களை வெறுக்கவில்லை. மத வேறுபாடுகள் பாராட்டாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான். நாமெல்லாம் ஒன்று. மனிதர்கள் என்ற நிலையில் நாமெல்லாம் சகோதர சகோதரிகள்.”]