பாப்லோ நெருடா ஸ்பானிஷ் கவிதைகள்

1964_ஆம் வருடமே நோபல் பரிசுக்காக இவர் பெயர் பரிசீலிக்கப் பட்டு, பல எதிர்ப்புகளின் காரணமாக வேறொருவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் 1971_ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டதாயினும், அதுவும் அத்தனை எளிதாகக் கிடைத்து விடவில்லை. தேர்வுக் குழுவில் இருந்த பலர் ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்கினை பாப்லோ நெருடா புகழ்ந்ததை மறக்கவில்லை. ஆனால் நெருடாவின் ஸ்வீடன் மொழிபெயர்ப்பாளரான ஆர்டுர் லன்ட்க்விஸ்ட் என்பவரின் முயற்சியால் நோபல் பரிசு கிட்டியது. நோபல் பரிசுக்கான ஏற்புரையில் ‘ஒரு கவிஞன் ஒரே நேரத்தில் ஒற்றுமைக்கும் தனிமைக்கும் உந்து சக்தியாகத் திகழ்கிறான்’ எனக் குறிப்பிட்டார் பாப்லோ நெருடா.