பாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்

1980இல் நடத்தப்பட்ட பட்டறைக்குப் பிறகு இரண்டு முறை தமிழகத்தில் நாடகப் பட்டறைகள் நடத்துவதற்காகப் பாதல் சர்க்கார் வந்தார். ஒன்று லயோலா கல்லூரியிலும், இன்னொன்று மதுரையில் ஐடியாஸ்- ஐக்கப் என்ற கிறித்தவத் தன்னார்வக் குழுக்களின் ஏற்பாட்டிலும் நடந்தது. அந்தப் பட்டறைகளில் பங்கெடுத்தவர்கள் பின்னாளில் நாடகக்காரர்களாக மாறவில்லை. மதுரையில் நடந்த பட்டறையின்போதுதான் நான் நேரடியாக அவரைப் பார்த்தேன். நாடகக்காரர்களை உருவாக்கும் நோக்கமில்லாமல் விழிப்புணர்வுப் பிரசாரகர்களை உருவாக்கும் நோக்கம்கொண்ட அப்பட்டறைகளின் பின்விளைவுகள் பற்றிக் குறிப்புகள் எவையும் இல்லை.

பாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது

தோல்வியுறாத மனத்திடத்துடன் தனக்காக அமைத்துக் கொண்ட வாழ்வுப்பாதையில் அசையா நம்பிக்கையுடன் முன்னே செல்லும் ஒரு மனிதரையே எதிர்கொண்டேன். வீட்டிற்குச் செல்லும் வழியை வரைபடமாக அனுப்பிவைத்து, தெர்மோஸ் ஃபிளாஸ்கில் டீயை எனக்காகச் சூடாக வைத்திருந்த கனிவான ஒரு முதியவரையும். லாவோசில் சமீபத்தில் நிகழ்த்திய பட்டறையை நினைவுகூர்ந்து, எவ்வளாவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு துரிதமாக மீண்டும் களத்திலிறங்குவதைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கும் அபாரமான நாடகத்துறையாளரையும். நகரவாழ்வைப் பற்றிய சர்காரின் விமர்சனங்களின் கூர்மை காலத்தால் இன்னமும் மழுங்கடிக்கப் படவில்லை.