அலகுடைய விளையாட்டு

அந்த முதல் வெற்றியை, நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே கவனித்து கொண்டிருந்த, மறக்கவே முடியாத கணங்களை அன்றிரவு வீடு திரும்பும்போது அசை போட்டேன். கை குலுக்கியபின் திரும்பிய டோடியாவின் தளர்வான நடையை, ஸ்கோரை மைக்கிடம் சொன்ன போது மைக்கின் கண்களின் ஆச்சரியத்தை, அன்றிரவு வீடு திரும்பி காரை அணைத்த பின்பும் ரேடியாவை அணைக்காமல் pink-கின் million dreams பாடல் முடியும் வரை கேட்டுக்கொண்டிருந்ததை, காரிலிருந்து இறங்கிக் கடும் குளிர் காற்றிலும் வானத்தின் மூன்று நேர்கோட்டுத் தாரகைகளைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்ததை…அடுத்த நாள் அலுவலகப் பயணத்திலும் அசை போட்டேன். மாலை, இரவு என்று அந்த வாரம் முழுவதும் யோசித்ததை நினைத்துச் சிரிப்பாக வந்தது.