ஆலமரத்தின் கீழ் ஒரு குடியிருப்பு

ராஜஸ்தானத்தில் பெண்களின் மேம்பாட்டுக்காக வேலை செய்ததால் உயர்சாதியினரால் மானபங்கப் படுத்தப்பட்டு, நீதிக்காகப் போராடி பின்னர் நீரஜா பனேட் விருது பெற்ற பவ்வரி தேவியை எல்லோருக்கும் தெரியும். ஆனால் ராஜஸ்தானத்தில் பல பவ்வரிகள். பவ்வர் என்று ஆண் குழந்தைகளையும், பவ்வரி என்று பெண்குழந்தைகளையும் கூப்பிடுவது வெகு சகஜம். செல்லமாக, கிராமப்புறங்களில் இந்தச் செல்லப் பெயரே பெயராக நிலைத்து விடுவதும் உண்டு. பவ்வரிகளின் வாழ்க்கை, போராட்டங்களுடன் இணைந்த வாழ்க்கையாக இருப்பதும் வியப்புக்குரியது இல்லை. காரணம், தாழ்ந்த சாதியினர் என்று அடையாளமிடப் பட்டவர்களிடையேதான் பவ்வரிகள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட ஒரு பவ்வரிதான் பவ்வரி பாயிபட்