ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் , ஒவ்வொரு காலத்தில் வேறுவேறு வகையில் உணரும் ஒன்றை, ஓர் இலக்கணத்திற்கு , விளக்கத்திற்கு உட்படுத்தி கட்டிபோடுகிறது. இது எனக்கு உடன்பாடில்லை. எல்லைகள் என்றும் என்னிடம் எதிர்ப்புணர்வையே உண்டாக்குகின்றன. ஆனால் பெண்ணாக வாழ்வதால், பெண் என்ற நிலையிலிருந்து எழுதுவதால் ஒருவித மொழி பிறக்கலாம். சில உதாரணங்களை சொல்கிறேன். என் ஆராய்ச்சிக்காக நான் பல பெண்களின் கதைகளை படிக்க நேர்ந்தது. ஆண்களுடையதையும் படிக்க நேர்ந்தது. சில விஷயங்கள் என்னை சிந்திக்க வைத்தன.நிறம், வடிவம் போன்ற விஷயங்கள். ஆண்களை விவரிக்கும் போது அவர்களுக்கான உபமானங்கள் தேக்கு மரம், உலக்கை, பாறாங்கல் போன்றவை இருந்தன. ஆண்கள் எழுத்தில் அதேசமயம் பெண்கள், கொடிகள், மிரளும் மான், பூக்கள் பழங்கள் என்று சித்தரிக்கப்பட்டனர். வேர்கள் ஆழப் புதைந்தும் கனத்துடன் கூடியம் உள்ள பொருட்கள் ஆண்களை குறித்தன .எடை இல்லாமல் மற்றவற்றை சார்ந்து, மற்றவர்களுக்கு களிப்பும் சுகத்தையும் தரும் பொருட்கள் பெண்களுக்கு உவமை ஆகின. நிறத்தை பொறுத்தவரை சிவந்த அல்லது சந்தன நிறம் உடைய பெண் தான் அழகு என்று சொல்லப்பட்டாள் . “அவள் கறுப்பு ஆனாலும் அழகு” என்ற விவரணை