வாக்குமூலம் – அத்தியாயம் 5

எனக்கு காவேரி அத்தையோட ஞாபகம்தான் வந்துச்சு. காவேரி அத்தை வீட்டு மாமா வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோவில் தெருவுல இன்னொரு குடும்பம் வச்சிருந்தாங்க. காவேரி அத்தை மூக்கும் முளியுமா நல்லாத்தான் இருப்பா. சமையல் எல்லாம் நல்லா பண்ணுவா. மாமாவுக்குத் தொண்டர் சன்னதியில் புரோக்கர் வேலை. வத்தல், வெங்காயம், சிமெண்ட் இன்னதுன்னு இல்ல. எல்லாத்தையும் லாரி பிடிச்சி வெளியூருக்கு அனுப்புவா மாமா. அதுல கமிஷன் கெடைக்கும். அத்தை – மாமாவுக்கு ஆண் ஒண்ணு பொண்ணு ஒண்ணுன்னு ரெண்டு பிள்ளைக. காவேரி அத்தையைக் குத்தம் சொல்ல முடியாது. கட்டாத்தான் குடும்பம் நடத்துனா.

தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்கும் நாட்டுப்புற அமெரிக்கர்கள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோவிட் தாக்கம் குறைந்துவிட்ட பின்பும், தடுப்பூசி விகிதம் குறைவாக இருந்த அந்த தனித்த பகுதிகளில், செழித்து வரும் கொரோனா வைரஸ் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து மக்களுக்கு நோயையும் மரணத்தையும் தந்து கொண்டிருக்கும்.

மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2

This entry is part 20 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

மிக முக்கியமான இன்னொரு விஷயம், சிகரெட் எப்படி ஒருவரை அடிமைப்படுத்துகிறதோ, அதே அளவிற்கு மின் சிகரெட்டும் அடிமைப்படுத்துகிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், சிகரெட் பழக்கத்திலிருந்து நுகர்வோரை விடுவிக்கிறேன் என்று முழங்கி, சந்தைக்கு வந்த மின் சிகரெட்டுகள் இன்னும் அதிக நிகோடினை உடலில் சேர்த்து, மேலும் நுகர்வோரை அடிமைப்படுத்துகிறது.

வலிதரா நுண் ஊசிகள்

வளர்ந்து வரும் பத்து தொழில் நுட்பங்கள்-2020 என்ற அறிமுகக் கட்டுரையைச் சென்ற இதழில் பார்த்தோம். ஒவ்வொன்றாக அவற்றை விரிவாக இப்போது பார்க்கலாம். திரைப்படங்களில் தந்தையின் அன்பைக் காட்டும் விதமாக ஒரு காட்சி இடம் பெறும். அவரது குழந்தைக்கு மருத்துவர் ஊசி போடுவார்; இவர் கண்களில் நீர் திரளும். இன்றும் “வலிதரா நுண் ஊசிகள்”

கேளாச்செவிகள்

பத்மபாதருக்கு இரண்டு காதுகளிலும் கடுமையான வலி ஏற்பட்டது. அவரின் மனைவி சிவகாமசுந்தரிதான் அவரை ‘காது, மூக்கு, தொண்டை’ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்கு முன்பாக மூன்றுபேர் அமர்ந்திருந்தனர். இவர்கள் நான்காவது ஆள். சிப்பந்தி வந்தார். நோயாளரின் பெயரைக் கேட்டு, எழுதிக்கொண்டார்.

நூறாண்டு! நூறாண்டு! பலகோடி நூறாண்டு!

இந்து சாஸ்திரம் மனிதர்களின் ஆயுட்காலத்தை 100-120 வருடங்களாக கணித்திருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. காஸ்ட்கோ நிறுவனத்தின் மாத சஞ்சிகை, 105 வயதான ஒருவர் 97 வயதான மனைவியுடன் மாதம் ஒரு முறை அவர்களுடைய அரிசோனா மாநிலக் கிளை உணவுக்கூடத்தில் புசிக்கிறார்கள் என்று சிரித்த முகத்துடன் உள்ள அவர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஒரு குஜராத்தி அன்பரை ஐடகோ மாநிலத்தில் சந்தித்தபோது அவர் அவர் சமீபத்தில் கலிஃபோர்னியாவிலிருந்து அம்மாநிலத்திற்குக் குடியேறியுள்ளதாக கூறினார். ஏனென்று நான் வினவியதற்கு அவர் கூறிய பதில் என்னை வியப்படைய வைத்தது.