ஆசிரியரின் முதல் கதையும் அவரது சொந்த அனுபவத்தை வைத்து எழுதியதும் என்று சொல்லப்பட்ட ‘விடிவு’, தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. நண்பர்கள் பைக்கில் செல்லும்பொழுது, ராஜா என்பவன் லாரியில் அடிபட்டு இறந்துவிடுகிறான். அவன் சடலத்தை இறந்தவன் வீட்டில் ஒப்படைக்கும்பொழுது எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை சஸ்பென்சாக வைத்து, கதை நகர்கிறது. ஏமாற்றுபவன், திருடன், காமக்கண்ணோடு பார்ப்பவன், சொல்வதொன்று செய்வதொன்று என்று நடமாடுபவர்கள், அப்பாவிகள் இருக்கும் கதைகள் உள்ள தொகுப்பில், மானுடத்தில் அன்பு மிச்சமிருக்கிறது என சொல்ல ஒரு எளிமையான கதை.