வட்டிகொண்ட விசாலாக்ஷி-2

பாப்பாயம்மாவோடு சிறைக்குச் சென்ற மற்றொரு பெண் சிட்டம்மா. இவள் திருமணமானவள். கணவன் சொத்தையெல்லாம் அழித்தபின் வேறு வழியில்லாததால் பிறந்து வீட்டிற்கு வந்தாள். வீட்டைத் தாண்டி வெளியில் சென்றறியாத சிட்டம்மா, ராட்டினம் நூற்க வேண்டும் என்று கூறிய காந்தியின்   அழைப்பை ஏற்றாள். சம்சாரம் இல்லாத பெண்ணாக, தாய் கொடுக்கும் வேதனையையும் உலகத்தின் பரிதாப பார்வைகளையும் தாங்க முடியாமல் மூச்சு விடக் கூட முடியாத நிலையை அனுபவிக்கையில். சிறைக்குச் செல்லத் துணிந்த பாப்பாயம்மாவை ஆதரிசமாக ஏற்று தானும் சிறைக்குச் செல்வதற்கு தயாரானாள். சிறைக்கும் சென்றாள். அதன் பின்பு ஹரிஜன சேவை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டாள். ஹரிஜன குடியிருப்பகளுக்குச் சென்று வந்தபின் குளிக்கக் கூட  மாட்டாயா என்று தாய் லபோ திபோ என்று அடித்துக் கொண்டு கூறிய  சொற்களை பழங்காலம் என்று எடுத்தெறிந்து பேசக் கூடிய அறிவு வளர்ச்சி அவளிடம் தென்படுகிறது.