நம்முடைய இறந்த காலத்தின் மடிப்புகளை வெங்காயத்தோல் போல ஒவ்வொன்றாக உரித்துப் போட. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் – எல்லோரும் தத்தம் பங்கை வசூலித்துக்கொண்டு போக வருவார்கள். தாய்- தந்தை, கணவர், நண்பர்கள். எல்லா தோல்களும் அவர்களிடம். ஒரு உபயோகமும் இல்லாத, காய்ந்து போன கடைசி குச்சி உங்கள் கையில் மிஞ்சும். மரணத்திற்குப் பிறகு அதை எரிப்பார்கள் அல்லது மண்ணில் புதைப்பார்கள். மனிதன் தனியாகத்தான் இறக்கிறான் என்று எல்லாரும் சொல்கிறார்கள். நான் இதை ஏற்பதில்லை. அவனுக்குள்ளிருந்த, அவன் சண்டையிட்ட அல்லது அன்பு செலுத்திய அத்தனை பேரோடும் சேர்ந்து தான் அவன் இறக்கிறான்
Tag: நிர்மல் வர்மா
இருள்
வந்ததும், வழக்கம் போல, பானோ என் நெற்றியின் மீது கை வைத்துப் பார்த்தாள். அவளுடைய கை சில்லென்று இருந்தால், இன்னும் காய்ச்சல் இறங்கவில்லை என்று எனக்கு தெரிந்து விடும்.ஆனால், கை வெதுவெதுப்பாக இருந்தால் காய்ச்சல் இல்லை என்று என் மனம் உற்சாகமடையும். கண்களைத் திறந்து ஆர்வத்துடன் கேட்பேன,” பானோ நான் குணமடைந்து வருகிறேன் இல்லையா?” ஏமாற்றம் நிறைந்த குரலில், “இப்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனால், மாலைக்குள் மறுபடியும் அதிகமாகிவிடும்” என்பாள்.