நான் இன்னும் ஜெர்மன் மொழியில்தான் எழுதுகிறேன், ஆமாம். வெகு சில பேர்களே இரு மொழிகளில் எழுதுகிறார்கள், பல மொழிகளில் திறமை படைத்திருந்த நபொகாவ் போன்ற ஒருவர் கூடத்தான். ரஷ்ய மொழியை விட்டு விட்டு இங்கிலிஷுக்கு நகர்ந்த நபொகாவ் இங்கிலிஷோடு தங்கி விட்டார். மொழி பெயர்ப்புகளுக்கு ரஷ்யனைப் பயன்படுத்தினார் என்ற போதும், அந்த மொழி பெயர்ப்பைச் செய்த பிறகு அந்த மொழியில் அவர் எழுதவில்லை, எனக்குத் தெரிந்த வரையில். நபொகாவ் செய்ததைப் போல வேற்று மொழிக்கு நகர்வது மிக, மிக ஆபத்து நிறைந்த வேலை என்று நான் சொல்வேன், மிகத் துன்பமானதும் கூட. இது வரை அந்த முடிவை எடுப்பதை நான் தவிர்க்க முயன்றிருக்கிறேன்.