குணப்படுத்த இயலாதது

ஒரு நாள் என் தாயார் என்னையும் (எனக்கு 7 வயது ) என்னுடைய வேறொரு தமக்கையையும் (வயது 10) அவரைப் பார்க்க அழைத்துச் சென்றார். புதிதாக உழுது போடப்பட்டிருந்த வயலின் பக்கலில் நடந்து சென்றோம். அது இலையுதிர் காலத்து ஆழமாகப் புரட்டி உழுதல் வகை, வயல்தரையைக் கோரி வாரும் பெரிய அடிமண் கட்டிகள் மெதுவாக நொறுங்கி பொடியாக உதிர்ந்து உழுசால் நெடுகிலும் பரவுவதற்காக செய்யப்படுவது. அவை மண் சீவல்கள் என்றழைக்கப் படுகின்றன; மற்றும் அவை கிட்டத்தட்ட மிகச்சரியான வடிவ கணிதத் திண்மங்கள் போல் தோற்றமளிக்கின்றன: வெட்டிக் குறைக்கப்பட்ட சாய்சதுர அறுமுகத் திண்ம வடிவங்கள் (truncated rhombohedron)எனக் கருதுங்கள்.

மர்மமான அந்தச் சிலெ நாட்டான்

அந்த இரு புத்தகங்களும் கருக்கு இழந்திருப்பதைப் பார்த்த பிறகு, “நீங்கள் இவற்றைப் படிக்கிறீர்களா,” என்று அதிர்ஷ்டமில்லாத செர்க்காஸ் வியப்புடன் கேட்கிறார்….
“பின்னெ, இல்லையா?” பொலான்யோ பதிலளிக்கிறார். “நான் எல்லாவற்றையும் படிக்கிறேன். தெருவில் காற்றில் அடித்துப் போகும் துண்டுக் காகிதங்களைக் கூட.” அவர் அந்த நாவல்களைப் பாராட்டுகிறார்,

விண்வெளி மனிதனும், மண்வெளி மனமும்

எவ்வளவு தூரத்தில், எப்படிப்பட்ட உலகமாக இருந்தாலும் சரி; அங்கே தொண்டையை நனைக்கக் கொஞ்சம் தண்ணீர் மட்டும் இருந்தால் போதும், ஏதோ ஒரு வகை உயிரினம் இருக்க வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் சல்லடை போட்டுத் தேடுகிறார்கள். அட,அட அசடர்களா, பூலோக மனிதனுக்குத்தானேய்யா தண்ணீர் தேவை? மற்றக் கிரகங்களில், செலினியத்தைத் தின்று மீதேனைக் குடித்து வாழும் உயிர்கள் இருக்க முடியாதா என்ன? அவர்கள் சினிமா பார்க்கும்போது பாப் கார்னுக்கு பதிலாக ப்ளூட்டோனியத்தைக் கடித்துத் தின்றாலும் ஆச்சரியம் உண்டா?

புதரை அடுக்கும் கலை (இறுதி பாகம்)

“இப்பப் பாரு,” அவர் சொன்னார், “நாம புதரை அடுக்கற கலையைப் பயில்கிறோம். அது ஒரு அடிப்படையான கலை. தவிர்க்கவியலாத கலையும் கூட. உன்னோட ‘அருங்கலைகள்,’ உன்னோட இசை, இலக்கியம் எல்லாத்தயும் பத்தி எனக்குத் தெரியும்- நானும் படிக்கப் போயிருக்கேன் – உன் கிட்ட நான் சொல்றேன், அதெல்லாம் அவசியம் இல்லை, விருப்பப் பாடங்கள். புதரை அடுக்கற கலை இருக்கே, அது விருப்பப் பாடமில்லை.”

“நீங்க ஸிம்ஃபனி இசையைப் பத்திச் சொல்றீங்களா?” ஆஸ்டின் நிறுத்தி இருந்தான், அவனுக்கு ஸிம்ஃபனி இசை என்பது எத்தனை முக்கியம் என்பதைக் குறித்துக் காட்டுவது போல அசைவற்று நின்றான்.

“ஸிம்ஃபனிகளா! பாழாப் போச்சுது, ஆமாம்!” ஆன்டி சொன்னார். “ஸிம்ஃபனிகளை எழுதவும், அதை எல்லாம் நடத்தவும், இசைக்கவும் தெரிஞ்ச ஒரு சமூகத்தை எடுத்துக்க, அதுக்குப் பாங்கா ஒரு சுமை புதரை அடுக்கத் தெரியல்லைன்னா, அவங்களுக்கு ஒரு மண்ணும் கெடைக்கப் போகிறதில்லை.”

புதரை அடுக்கும் கலை

ஆகவே, இறுதிச் சடங்கு நடக்கும் இடத்தில் ஆன்டி உரை மேசையின் பின்னே நின்று டானியைப் பற்றிப் பேசினார்….ஆன்டி அந்த விதிகளைப் பேசினார்: “உங்கள் அண்டை வீட்டுக்காரருக்கு உதவி தேவையாக இருக்கையில், போய் உதவுங்கள். அண்டை வீட்டுக்காரர்கள் சேர்ந்து வேலை செய்கையில், எல்லாரும் முடிக்கும் வரை, யாரும் முடித்து விட்டதாக ஆகாது.” ….
அந்த நாளையின் மற்றும் அவரது நீண்ட வருடங்களின் களைப்பும் அவரை முழுக்காட்டுகையில், அவருடைய பாட்டனார் காட்லெட் தன் ஞானத்தின் வெற்றியையும், அதன் சோகத்தையும் ஒரே வாக்கியத்தில், “கடவுளே ஆமாம், ஒரு மனிதன் ஒரு நாளில் எத்தனை செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும்.” என்று அவரிடம் சொன்னதை ஒரு மாலையில் சில சமயம் அவர் நினைவு கூர்வார்.