ராபர்ட் கெஹோ, சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் தன்னுடைய ஆய்வுகளை நடத்தி வந்தார். இவருடைய ஆய்வகம், ஜி.எம்., டூபாண்ட் மற்றும் ஈதைல் நிறுவன அன்பளிப்பில் தொடங்கி, உதவித் தொகையில் இயங்கியது. அத்துடன், ராபர்ட், ஈதைல் நிறுவனத்தின் ஆலோசகர். ஈதைல் நிறுவனத்திற்குச் சாதகமான சோதனை முடிவுகள் தொடர்ந்து வெளிவந்ததன் பின்னணி இதுதான்…. விஞ்ஞானப் பித்தலாட்டத்தின் ஒரு வசீகர ஏற்பாடு இது. ராபர்ட், ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக வெளியுலகிற்குக் காட்சியளித்தார். இதனால், அவரது முடிவுகளுக்கு ஒரு நடுநிலை இருப்பதாக அனைவரும் நம்பினார்கள். இன்றும் இதுபோன்ற ஏற்பாடுகள் உலகப் பலகலைக்கழகங்களில், அதுவும் வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஏராளம்.