நம்பிக்கையூட்டும் பூச்சுற்றல் அல்ல இது. இவர் சொல்லும் புள்ளி விவரங்கள் மற்றும் தீர்வுகள், இரண்டையும் இந்தப் பகுதியில் பார்ப்போம். என் அனுபவத்தில், முதன்முறையாக, ஒரு ஆவணப்படத்தைப் பல முறை பார்த்ததோடு, உட்கார்ந்து குறிப்புகளும் எடுத்துக் கொண்டேன். இந்தக் கட்டுரைக்காக அதைச் செய்தேன் – ஆவணப்பட இயக்குனராக அல்ல!
Tag: தொல்லெச்ச எரிபொருள்
பருவநிலை மாற்ற ஆர்வலர்கள்
–ல், ஒரு மில்லியன் மாணவர்கள் ஒரே நாளில், பருவநிலை மாற்றம் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிளர்ச்சி செய்தனர். இவர்களது கிளர்ச்சி, அரசியல் தலைமையை நடவடிக்கை எடுக்கத் தூண்டுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். ..2019 –ல், ஒரு மில்லியன் மாணவர்கள் ஒரே நாளில், பருவநிலை மாற்றம் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிளர்ச்சி செய்தனர். இவர்களது கிளர்ச்சி, அரசியல் தலைமையை நடவடிக்கை எடுக்கத் தூண்டுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். சில நாட்களுக்கு சமூகத்தில் வயதானவர்கள் சற்று தர்மசங்கடப்பட்டுவிட்டு, பிறகு அவரவர் தொல்லெச்ச எரிபொருள் காரில் ஏறி, வேலையைப் பார்க்கச் சென்று விடுவது நம் சமூகத்தின் சாபக்கேடு. இவர்களது கோரிக்கைகள் என்ன?..தொல்லெச்ச எரிபொருள்கள் 100% குறைக்க வேண்டும்
தொல்லெச்ச எரிபொருள் தயாரிப்பாளர்களுக்கான மானியம் நிறுத்தப்பட வேண்டும்
எல்லா சக்தியும் புதுப்பிக்கக்கூடிய சக்தியாக மாற வேண்டும்.
புவி சூடேற்றம் பாகம்-14
கடந்த 60 ஆண்டுகளாக, புதுப்பிக்க்கூடிய சக்தி உருவாக்கம் பற்றிய ஆராய்ச்சி நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த ஆராய்ச்சியை முன்னே செல்ல விடாமல் தடுப்பது என்னவோ தொல்லெச்ச எரிபொருள் நிறுவனங்கள். சூரிய ஒளியை, காற்றின் ஆற்றலை, மற்றும், புவிவெப்ப சக்தியைப் பயன்படுத்தும் முயற்சிகள், நாளுக்கு நாள் செயல்திறன் கூடிக் கொண்டே வருகிறது