நான்கு நாள் மழிக்காத தாடியை தெருக்கோடி நாவிதர் கத்தி வைத்து மழித்து, காசு வேண்டாம் என்றது. சோப் பூசிக் குளிக்காமல் வெறும் நீரில் அரப்புப்பொடி கலந்து தேய்த்துக் கொண்டது. விரித்த கைகள் போல் அகலம் அதிகமான தாமிரப் பாத்திரத்திலிருந்து எடுத்து எடுத்து மேலே பொழிந்து கொண்டு குளித்தது. மேலே துர்நாற்றம் இல்லாமல் சன்னமான பூ வாடை. மறக்க முடியாதது எல்லாம். இந்த சவரமும் குளியலும் பிடித்துப் போனது பரமனுக்கு. சோப்பின் முரமுரப்பும் சுத்தமான மேல் தோல் தரும் புத்துணர்ச்சியும் அரப்புப் பொடி தருவதில்லை தான். சோப்புக்கு எங்கே போக இந்த பழைய பாணி ஊரில்?
Tag: தொடர்கதை
மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
நாராயண பிஷாரடி வைத்தியர் ஒரு கனவு கண்டார். பேராசிரியர் பிஷாரடி. பிஷாரடி வைத்தியர். எல்லாம் அவர் பெயர் தான். அவர் கண்டது தூசு அடர்ந்த சிறிய ஊரின் வீதிகளில் சைக்கிள் ஓட்டிப் போகும் கனவு. சைக்கிளை அதி வேகமாகப் பின் தொடர்ந்து கனைத்தபடி ஒரு செந்நாயோ, கடுவன் பூனையோ, “மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்”
லக்ஷ்மி எழுதிய “ஸ்ரீமதி மைதிலி” நாவல்
லக்ஷ்மியின் படைப்புக்களில் குடும்ப அமைப்பும் அதில் குடும்பப் பெண்களுக்குத் தரப்படும் முக்கியத்துவமும் மையப்பொருளாக அமைந்துள்ளன. இவரது கதை முடிவு நல்லதொரு குடும்பம் உருவாவதையே கூறுகிறது; நலமாக முடிகிறது. தவறு செய்தவர் மனம் திருந்தி மீண்டும் நல்வாழ்வை மேற்கொள்வதாக அமைகிறது…