பல நூறு ஆண்டுகளாக இங்கிலாந்து உருவாக்கிய உலகத்தர அமைப்புகள் (world class institutions) அந்த நாட்டை உலக அளவில் முக்கியமானதாக்குகிறது. பிரிட்டிஷ் உடல்நல முறைகள், பல்கலைக் கழகங்கள், அவர்களது சக்தி வாய்ந்த கப்பல்துறை, விஞ்ஞான ஆராய்ச்சி கழகங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். சுதந்திர இந்தியாவில், பல உலகத் தர அமைப்புகள் உருவாகியது உணமை. ஆனால், பெருவாரியான இந்தியர்களை பயனடைய இவை உதவவில்லை. என் பார்வையில் ‘இந்திய அடுக்கு’ நாம் உருவாக்கிய உலகத்தர அமைப்பு. நம்முடைய அரசியல் நோக்குகளை அதன் மேல் பூசாமல், தொடர்ந்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதன் குறைகளை நீக்குவது மிகவும் முக்கியம். ஏனென்றால், இந்த இந்திய அடுக்கு முயற்சி, சாதாரண இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்
Tag: தொகுப்புச் சங்கிலி
ப்ளாக் செயின் – ஓர் எளிய அறிமுகம்
தொகுப்புச் சங்கிலி மிக மிக பாதுகாப்பானது. இது கட்டாயம் மோசடி மற்றும் கையாடலைக் கணிசமாகக் குறைக்கும். தரவுகளில் திருத்தம் செய்வது மிகக் கடினம். மேலும் எல்லா பரிமாற்றங்களும் ஒரே பேரேட்டில் சேமிக்கப்படுகிறது. பரிமாற்றங்கள் இடைத் தரகர்கள் மற்றும் மூன்றாம் தரப்புகளின் தேவையை முழுவதும் இல்லாமல் செய்துவிடும்.
தொகுப்புச் சங்கிலி தொழில்நுட்பம் இன்றுள்ள தொழில்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். உதாரணமாக நிதித் துறை, நீதித் துறை, கல்வித்துறை, இசைத்துறை என பல துறைகளில் மாற்றமும் முன்னேற்றமும் வருவதைத் தடுக்க முடியாது.