நீலகண்டப் பறவையைத் தேடி

மஞ்சள் பூ பூத்திருக்கும் சிறு கடுகுச் செடி முதல் பேராலமரம் வரை நிலத் தாவரங்களும், நதிப்படுகையின் கோரைப்புல் முதல், ஏரியின் ஆழத்தில் உள்ள கிழங்குக் கொடிகள், நாணல் வரையான நீர்த்தாவரங்களும் கதைக்குப் பங்களிக்கின்றன. அது போன்றே எலி, தவளை முதலான சிறு விலங்குகளிலிருந்து யானை போன்ற பெருவிலங்கு வரை பல்வேறு விலங்குகளும் நாவலெங்கும் இடம் பெற்று கதையோட்டத்திற்கு உதவுகின்றன. சிறு மின்மினிப்பூச்சிகள், வயல் நீரில் வட்டமிடும் சிறு நீர்ப்பூச்சிகள், ஜிஞ்ஜி போன்ற குளிர், பனி இரவுகளில் ஒலியெழுப்பும் பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள், பறவையை முழுங்கும் பானசப்பாம்பு போன்றவை கதை நெடுக நடமாடுகின்றன.