இஸ்லாமியர் ஒருவர் திரைப்படத்தில் இந்து சமய பக்திப் பாடல்களை எழுதியது தொடர்பான கருத்து வேறுபாடுகள் ‘திருவிளையாடல்’ திரைப்படக் காலத்தில் தமிழ்த் திரையில் இருந்ததைப் போல, வடக்கிலும் பைஜு பாவ்ரா (1952) திரைப்படக் காலத்தில் இருந்துள்ளது.பைஜு பாவ்ராவில் பக்திப் பாடல்கள் நிறைய எழுதப்படவேண்டியதால் இயக்குநர் விஜய் பட் கவிஞர் கவி ப்ரதீப்பைப் பரிந்துரைத்துள்ளார். ஒருமுறை ஷகீலின் பாடல்களைப் பார்த்துவிடும்படி இசையமைப்பாளர் நௌஷாத் விஜய் பட்டிடம் விண்ணப்பம் வைக்க, ஷகீலின் பாடலைப் பார்த்த விஜய் அவருக்கு பைஜு பாவ்ராவில் பக்திப்பாடல்களை எழுத வாய்ப்பு அளிக்கிறார்.