வேறு ஒன்றுமில்லை இந்த உங்கள் வீட்டு மாடியில் இரண்டு விசாலமான அறைகள் இருப்பதைப் பார்க்கிறேன். இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவ்வப்போது இங்கே வந்திருந்து கடல்காற்று வாங்கி மனதுக்குப் பிடித்த வைத்திய சாஸ்திர ஏடுகளை ஆராய விரும்புகிறேன். நான் பைத்தியநாத் அரச வைத்தியரிடம் வைத்திய சாஸ்திரம் பயில்வது தங்களுக்குத் தெரிந்திருக்கலாம் சென்ஹோர் பெத்ரோ. இரண்டு வீடு கடந்து பிரதானி நஞ்சுண்டையாவோடு சேர்ந்து இந்தியக் கவிதைகளை போர்த்துகீசிய மொழியாக்கம் செய்யவும் செயல்படுகிறேன். எல்லாவற்றையும் கவனிக்க, இந்த இரண்டில் ஒரு மாடி அறையை எனக்கு தற்காலிகமாக கொடுத்து விடக் கோருகிறேன். மாதம் நூறு வராகன் குடக்கூலி தருவேன். அதற்கு மேல் தேவை என்றாலும் தருவேன்”.
Tag: ஜெர்ஸோப்பா
மிளகு அத்தியாயம் இருபத்தாறு
சென்னா பதிலுக்குக் காத்திராமல் சிட்டுக்குருவியாக ஓடிப் போகிறாள். வரதன் புன்முறுவலோடு அவள் வரக் காத்திருக்கிறான். ஐந்து நிமிடம் போனது. பத்து நிமிடம். என்ன ஆனது சென்னாவுக்கு? மகாராணி எங்கே? நடுநடுங்கி வெறும் உபாத்தியாயன் வரதன் தோட்டத்துக்கு இட்டுச் செல்லும் ஒழுங்கையில் நடக்கத் தொடங்குகிறான் சென்னாவைத் தேடி. மாலை மயங்கிவரப் பாதை இருண்டு வருகிறது. ஒரு திருப்பத்தில் வரதன் மேல் பூக்குவியல் ஒன்று விழுகிறது. அவனை இறுக அணைக்கும் கரங்கள் சென்னாவின் பூங்கரங்கள். அவனைத் தரைக்கு இழுக்கும் வலிமை வாய்ந்த கரங்கள் அவை. வரதன் தன்னை இழக்கிறான். சென்னாவின் செவ்விதழ்களில் முத்தமிட்டுப் பற்றிக்கொள்கிறான். கைகள் ஊர்கின்றன. நிலைக்கின்றன. மறுபடி ஊர்கின்றன. யாரோ கோல்விளக்கோடு தொலைவில் கதவு திறந்து வருகிறார்கள். சென்னா விலகிக் கொள்கிறாள். கற்றுத்தந்த மாணவி முன்னே நடக்க, கற்ற உபாத்தியாயன் தொடர்கிறான்.