ஐந்தாம் வகுப்பு முடிந்ததும் நாங்கள் ஆறாம் வகுப்புக்கு நேரு நடுநிலைப்பள்ளிக்கு மாறினோம். துவக்கப் பள்ளியில் படித்ததில் எங்களுடன் இருந்தவர்கள் மூன்று பேர்தான். சிலர் நேரடியாக மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புக்குப் போய்விட்டனர். ஆறாம் வகுப்பு போனதும் நாங்கள் எங்கள் நட்பு வட்டத்தை விரிவாக்கும் முடிவினை ஒத்த மனதுடன் ஒருமிக்க எடுத்து புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொண்டோம். அவர்களை இணைக்கையிலேயே நாங்கள் எங்கள் அனுபவ மூப்பினை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்த மாட்டோம் என்றும் இணைப்பு உறுதிமொழியாகக் கொடுத்திருந்தோம்
Tag: ஜா. ராஜகோபாலன்
தெய்வநல்லூர் கதைகள் – 2
பஜாரில் உள்ள பெட்டிக்கடைகளில் இருந்து விற்பனையாகாத அழுகும் நிலைக்கு முந்தைய நிலையை எய்திய பழங்களைச் சேகரித்தல், கிராமத்தின் வீதிமுனைகளில் வீசப்பட்டு சுற்றுப்புறச் சூழலை சீர்கெடுக்கும் பாட்டரி கட்டைகளை மாற்றுப் பயனீட்டும் பொருட்டு சேகரித்தல், உள்ளூர் உணவுப் பொருள் கிடங்கில் தேவைக்கும் அதிகமாக கொக்கி போடப்பட்டு தரையில் கொட்டி “கையாளுதலில் சேதாரம்” என்ற கணக்கில் காட்டப்பட்டு பெருக்கி அள்ளி மலிவு விலையில் அளிக்கப்படும் சீனியைச் சேகரித்தல், உள்ளூர் வெல்லம் காய்ச்சும் பணிமனையில் வெல்ல வட்டைக்குள் இறங்கி வட்டையைச் சுரண்டி தூள் வெல்லத்தை சேகரித்தல் , மிக முக்கியமாக இம்மூலப்பொருட்களை ஊருக்கு வெளியே மறைவாக இயங்கும் தொழிற்சாலைக்கு கொண்டுவந்து சேர்த்தல் ஆகியவற்றில் சுனா கானா சிறப்பாகப் பணிபுரிந்தார்.
தெய்வநல்லூர் கதைகள் – 1
பரணி அவர்கள் பள்ளி என்பதை விளையாட்டு மைதானமென கருதுபவர். விசித்திரமான விளையாட்டுகளை நிதமும் அரங்கேற்றி மகிழ்வார். பின்னாளில் கிளாடியேட்டர் படம் எனக்கு எந்த வியப்பையும் தராமல் போனதற்கு காரணம் தரணி புகழ் பரணி தான். வகுப்பில் இருவரைத் தேர்வு செய்வார். இருவரும் சண்டை போட வேண்டும். விழும் அடிகளை பரணி கணக்கெடுப்பார். யார் அதிக அடிகள் கொடுக்கிறாரோ அவரே வெற்றியாளர். அவருக்கு பரணியால் பச்சைக் காகிதம் சுற்றிய பத்து பைசா ந்யூட்றின் சாக்லேட்டின் பாதி மனமுவந்து அளிக்கப்படும்.
ஆட்டத்தின் ஐந்து விதிகள் – இறுதிப் பகுதி
ஐந்து விதிகளும் அலிபாபா குகையைத் திறக்கும் மந்திரம் இல்லை. விற்பனையைப் பொறுத்தவரை அப்படி ஒரு மந்திரத்தைக் கண்டுபிடித்தவர் எவருமில்லை. பிறகு இந்த ஐந்து விதிகளும் என்ன செய்யும்? எதற்குப் பயன்படும்?
இந்த விதிகள் விற்பனையை ஒரு வழமைச் செயல் எனும் நிலையிலிருந்து சிந்தனைச் செயல்பாடாக மாற்ற முயல்கின்றன. திறன் சார்ந்த பணிகளைப் போலவே விற்பனையிலும் பணியின்போது திறன் மேலும் மேலும் மெருகேறி கூர்மை கொள்கிறது. ஒவ்வொரு பணியும் திறனின் வெவ்வேறு பரிமாணங்களைக் கோருகிறது.
ஆட்டத்தின் ஐந்தாவது விதி
தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளும் அற்ப மகிழ்வை நொடி நேரம் விற்பனையாளர் காட்டிவிட்டாலும் போதும், அசைக்கப்பட்ட வாடிக்கையாளர் மனம் அதைக் கவனித்து விடும். வாடிக்கையாளர் குறித்த நம் சிந்தனையில் புன்னகை சேர்ந்தால் நம்மால் வாடிக்கையாளரை உணர முடியும்.
ஆட்டத்தின் ஐந்து விதிகள் – நான்காம் விதி
உங்களுக்கு இப்போது எப்படி இருக்கும் ? அன்று முழுவதும் தேநீர் சந்திப்புகளில் அவரைப் பற்றி பொருமித் தள்ளிவிட மாட்டீர்களா ? ஆனால் ஒரு மேலாளர் வேறெப்படி செயல்பட முடியும் என எண்ணுகிறீர்கள் ? வேண்டுமானால் பாராட்டை இன்னும் அழுத்தமாக அனைவருக்கும் நடுவே செய்யலாம். உங்களைக் காட்டி பிறரை மேலும் “ஆட்டத்தின் ஐந்து விதிகள் – நான்காம் விதி”
ஆட்டத்தின் ஐந்து விதிகள்- நான்காவது விதி
பாராட்டுவோர் அனைவருமே ஐந்து அல்லது பத்து வினாடிகளுக்கு மேல் போவதில்லை; பாராட்டுதல்களும் உதிரியான ஒற்றைச் சொற்கள் மட்டுமே. “சூப்பர், அருமை, சிறப்பு, கெத்து கலக்கல், செமை” என்பன போன்ற வார்த்தைகளும், “Great, Superb, fantastic, wow, mind boggling, awesome” என்பன போன்ற வார்த்தைகளும்தான் மீள மீள பயன்படுத்தப்பட்டன…
அதாவது வியப்பொலிச் சொற்களை சொல்வதையே பெரும்பாலும் நாம் பாராட்டாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்…
ஏட்டுச் சுரைக்காயைக் கறியாக்குவது எப்படி?
2004 ஆம் ஆண்டின் ஒரு மதியப்பொழுதில் இருந்து மாலை வரை 6 விதமான மரணங்கள் எனக்கு தொடர்ந்து நிகழ்ந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நிகழ்ந்திருந்தாலும் அனைத்து மரணங்களிலும் ஒரு ஒற்றுமை இருந்தது. அது நான் என் குடும்பத்தை ஒவ்வொரு மரணத்திலும் ஆதரவின்றி நிறுத்தியிருந்ததுதான். ஆறு முறை மரணித்த பின் அன்றிரவு உறங்கப் போகையில் என் மரணத்திற்குப் பின் என் மனைவி, குழந்தைகளின் நிலைமையினை எண்ணி இன்னும் திருமணம் ஆகியிராத நான் கண்ணீர் சிந்தும்படி ஆனது.