ஊர்மிளா பவாரின் இரண்டு சிறுகதைகள்

அப்பா அந்த நாளைய ஸ்கூல் மாஸ்டரானதால் ‘அடி’ மாஸ்டராகவே திகழ்ந்தார். ஏதோ அடிப்பார் என்றில்லை. அடிக்க ஆரம்பித்தார் என்றால் தன்னையே மறந்துவிடுவார். எங்கள் ‘வாடி’யில் அவர் ஒருவர்தான் படித்தவர். எவ்வளவு படித்திருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்? ஏழாம் கிளாஸ் வரை.