கற்றளி

“ஒரு பெரிய ஆளுமை எப்பவுமே தன்னை உலகறியச் செய்ய ஒரு புது உத்தியைக் கையாளும். உடனே, அடுத்த பெரிய ஆளுமையும் ‘தன்னைத்தான் இந்த உலகம் பெரியவனாக ஏத்துக்கிட்டுக் கொண்டாட வேண்டும்னு’ நினைக்கத் தொடங்கிடும். அங்கதான் பெரிய சிக்கலே தொடங்குது” என்றார்.
…“ஒரு பெரிய விஷயம் செஞ்சு முடிச்ச அந்தப் பெரிய ஆளுமையைவிட விஞ்சி நிற்குறதுக்காக அடுத்த ஆளுமை அந்தப் பெரிய விஷயத்தை அழிச்சுட்டு வேறு ஒன்றை அதைவிடப் பெரியதாகச் செய்ய நினைக்கும். அல்லது அந்தப் பெரிய விஷயத்தை அழிக்காமலேயே அதைவிடப் பல மடங்கு பெரிசா செய்யத் தொடங்கும். அதனால இந்த இரண்டு ஆளுமைகளுக்கும் இடையே ‘நீயா? நானா?’ போட்டி ஆரம்பமாகும்” என்றார் தாத்தா.