மிளகு அத்தியாயம் நாற்பது

சென்னா மகாராணி சற்றே முகம் சுளித்தபடி கோவில் படிகளை நோக்கி நடக்கின்றாள். மலர்ந்த வதனமும் நிறைந்த சிரிப்புமாகத்தான் ஜனக் கூட்டங்களை எதிர்கொள்வாள். கைதட்டும் ஜயவிஜயீபவவுமாக அவளை வரவேற்கும் குரல்கள் எங்கே? அவை இருக்கின்றன தான். சென்னா முகம் மலரும் போது அவையும் திரும்பி வரும். வெடி விபத்துகள் காணாமல் போகும்போது அது நடக்கும். வெடிகள் பற்றிய நினைவை கோவில் வாசலில் விட்டுவிட்டு கிருஷ்ணசாமியிடம் சரண் புகுந்திட விசாலமான கோவில் கபாடங்களைத் திறக்கச் செய்து உள்ளே நடந்தாள் சென்னபைரதேவி ராணி. கருவறைக் கதவுகளும் தாந்திரீக சம்பிரதாயத்தில் சார்த்தி வைத்து கிருஷ்ணனை முதுகுப் புறம் மட்டும் காட்டும் இரண்டாவது உத்தர கன்னடக் கோவில் இது.

மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு

கைவேலை காட்டமாட்டாள் அவள் விருந்தாளிகளிடம். சந்தோஷமாக கள்ளும்  பிராந்தியும் கலந்து அருந்தி ஓவென்று குதித்துக் கூக்குரலிட்டு அனுபவிக்கட்டும். நாளை முதல் தள்ளுபடி விலை, இலவச பானம் அவ்வப்போது. நிச்சயம் வந்து விடுவார்கள். கேட்ட மதுவில் ஒரு சிறு நகக்கண் அளவு ஊமத்தைப் பொடி கலந்து விடுவாள். ஒன்றும் புதுசாகத் தெரியாது. கொஞ்சம் தலை கிர்ரென்று சுத்தலாம் என்று வைத்திய செங்கமலம் சொன்னாள். அரிந்தம் வைத்தியரின் சிஷ்யர்களும் அதைத்தான் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். வரும் திங்களுக்குள் இந்த வீரர்கள்   ஹொன்னாவர் வீதிகளில் போதம் கெட்டு அலைவார்கள்

மிளகு அத்தியாயம் இருபத்தாறு 

சென்னா பதிலுக்குக் காத்திராமல் சிட்டுக்குருவியாக ஓடிப் போகிறாள். வரதன் புன்முறுவலோடு அவள் வரக் காத்திருக்கிறான். ஐந்து நிமிடம் போனது. பத்து நிமிடம். என்ன ஆனது சென்னாவுக்கு? மகாராணி எங்கே? நடுநடுங்கி வெறும் உபாத்தியாயன் வரதன் தோட்டத்துக்கு இட்டுச் செல்லும் ஒழுங்கையில் நடக்கத் தொடங்குகிறான் சென்னாவைத் தேடி. மாலை மயங்கிவரப் பாதை இருண்டு வருகிறது. ஒரு திருப்பத்தில் வரதன் மேல் பூக்குவியல் ஒன்று விழுகிறது. அவனை இறுக அணைக்கும் கரங்கள் சென்னாவின் பூங்கரங்கள்.  அவனைத் தரைக்கு இழுக்கும் வலிமை வாய்ந்த கரங்கள் அவை. வரதன் தன்னை இழக்கிறான். சென்னாவின் செவ்விதழ்களில் முத்தமிட்டுப் பற்றிக்கொள்கிறான். கைகள் ஊர்கின்றன. நிலைக்கின்றன. மறுபடி ஊர்கின்றன. யாரோ கோல்விளக்கோடு தொலைவில் கதவு திறந்து வருகிறார்கள். சென்னா விலகிக் கொள்கிறாள். கற்றுத்தந்த மாணவி முன்னே நடக்க, கற்ற உபாத்தியாயன் தொடர்கிறான்.