நான் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் எம். ஏ. படிக்க வந்தபோது பாலப்ரியா என்ற எழுத்தாளர் மூலம் சூடாமணி எனக்கு அறிமுகமானாள். பத்தொம்பது வயதிலிருந்து அவள் மரணம் நேரும் காலம் வரை என் இலக்கிய முயற்சிகளுக்கும் என் வாழ்க்கையின் பல்வேறு போக்குகளுக்கும் ஏற்ற இறக்கங்களுக்கும் என் உற்ற துணையாய் இருந்தவள் சூடாமணி. நான் எம்.ஏ படிக்க வரும் முன்பே சூடாமணியின் கதைகளைப் படித்திருந்தேன். மனத்துக்கினியவள் நாவல் முதல் பல கதைகளைப் படித்திருந்தேன். சூடாமணியின் இருவர் கண்டனர் ஆனந்தவிகடனில் 1961இல் வெளிவந்துகொண்டிருந்தது…