அங்கிருக்கும் வேலையாட்களிடம் தனக்கு ஒரு வேலை வேண்டும் எனக் கேட்கிறான். அவர்கள் அந்தப் படகின் சாரங்கியிடம் அவனை அழைத்துக் கொண்டு போகின்றனர். சாரங்கியோ மிகவும் கறாறான, கண்டிப்பான பேர்வழி. அவன் நசீமிற்கு வேலை போட்டு கொடுப்பதாகச் சொல்கிறான். ஆனால் சம்பளம் இல்லை. வெறும் உணவு மட்டும்தான். உடுத்த துணி கூட கிடையாது. அங்கிருக்கும் வேலையாட்கள் எல்லோரும் சாரங்கியால் அடிமைகள் போலத்தான் நடத்தப்படுகிறார்கள். நசீமின் நிலையும் அதுவே.
Tag: சு. கிருஷ்ணமூர்த்தி
நீலகண்டப் பறவையைத் தேடியவர்
ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை மொழிபெயர்த்த விஷ்ணுபத பட்டாசார்யாவுக்குப் பிறகு தமிழிலிருந்து வங்காளத்துக்கு நேரிடையாக மொழிபெயர்ப்பவர்கள் யாரும் இருக்கவில்லை. கிருஷ்ணமூர்த்தி தேஷ் பத்திரிகையை இது பற்றி அணுகியபோது அதற்கு வாசகர் வரவேற்பு இல்லை என்ற பதிலே கிடைத்தது.