காற்றுமண்டலத்தின் ஒவ்வொரு அடுக்கையும் வைத்துப் பார்த்தால், நம்முடைய நிலத்தளவு வெப்பம் சராசரி -15 டிகிரியாக இருக்க வேண்டும். எப்படி 15 டிகிரியானது? இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கிய காரணம், உலகின் மிக முக்கிய சூடேற்றும் வாயுவான நீராவி. மேகங்கள் (நீராவி) நம் பூமி, உறையாமல் இருக்க முக்கிய காரணம்.
Tag: சுற்றுச்சூழல்
சீமைக்கருவேலம் – நன்றும் தீதும்
ரோமானிய தொன்மத்தில் வளமை மற்றும் விடுதலையின் கடவுளான சனியின் (Saturn) மனைவி ஓபிஸ் (Opis) நிலம்,மிகுதியான வளம் மற்றும் அறுவடையின் கடவுளாக கருதப்படுகிறார். ஓபிஸின் கைகளில் செங்கோலும், சோளக்கதிர்களும், தானியங்கள் நிரம்பி வழியும் கொம்புக்கொள்கலனும் இருக்கும். 1877ல் ஜமைக்கா’விலிருந்து இந்தியாவுக்கு தருவிக்கப்பட்டதால் ’’சீமைக்கருவேலம்’’ (foreign acacia) என்றழைக்கப்படும், தென் “சீமைக்கருவேலம் – நன்றும் தீதும்”
கரிமக் கவர்வு (Carbon Capture) எந்திரங்கள் கண்காட்சி
படிம (fossil) எரிபொருட்கள் பயன்பாட்டால் ஆண்டுக்கு 50 பில்லியன் டன் கரிமம் வளிமண்டலத்தில் சேர்கிறது. ஆனால் கரிமக் கவர்வுக் கருவிகளால் பிரித்தெடுக்க முடிவது சொற்பமே, ஈரிலக்க டன்கள் அளவைத் தாண்டாது. இருப்பினும் பசுங்குடில் வாயு உமிழ்வுக் குறைப்பினால் மட்டுமே புவி வெப்பமாதலைத் தடுத்து நிறுத்திவிட முடியாதாகையால் கரிமக் கவர்வும் தொடர வேண்டும் என்கிறார், கண்காட்சியின் நெறியாளர் வார்ட் (Ward).
உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை
விஞ்ஞானக் கோட்பாடுகள், பொதுவெளிப் பத்திரிகைகளில் வரும் செய்திகள் போன்றவை அல்ல. கோட்பாடுகள், திறமை பெற்ற சக விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்படவேண்டும், அத்துடன், கோட்பாடுகள் ஊர்ஜிதப்படுத்தத் தகுந்த சோதனை முடிவுகளுடன் வெளிவரவேண்டும். அத்துடன், சில விஞ்ஞான அளவுகளை ஒரு நல்ல கோட்பாடு, கறாரான கணக்கீடுகள்கொண்டு ஊகிக்கவும் வேண்டும்.
ராட்சச எண்ணெய்க் கசிவுகள்
எண்ணெய்த் தொழில் வழக்கப்படி Premex நிறுவனம், பாதி எண்ணெய் வெளிவந்தவுடன் எரித்துவிட்டோம், கொஞ்சம் ஆவியாகிவிட்டது, மற்றதைக் கவனத்துடன் அப்புறப்படுத்தி விட்டோம் என்று மார் தட்டிக்கொண்டது. இந்த எதையும் தனிப்பட்ட பாரபட்சமில்லாத எந்த ஓர் அமைப்பும் உறுதி செய்யவில்லை.