சித்ரனின் கதைகள் அறிமுக எழுத்தாளர்களுக்கான எந்த தடையையோ தடுமாற்றத்தையோ பெரிய அளவில் எதிர்கொள்ளவில்லை. அவரது தொடக்கக்கால கதைகளில் சில நெருடலான/ பொருத்தமற்ற உவமானங்கள் வெளிப்படுகிறது. உதாரணமாக “செதில்களால் நெய்யப்பட்ட சட்டையை உரிக்கும் அரவமாய் எனது வெறுமையை என்னிலிருந்து அகற்ற அண்ணா நகர் பூங்காவிற்கு கிளம்பினேன்.” “கூட்டத்தால் கைவிடப்பட்ட கழுதைப்புலி ஒரு வலிமையான இரையை தாக்க வழியில்லாது வெறித்திருப்பதைப் போல் அவளை கவனித்தவாறிருந்தேன்” (தூண்டில்). இரண்டு மூன்று கதைகளுக்கு பிறகு இவ்வகையான பயன்பாடும் மறைந்து நேர்த்தி
Tag: சுனில் கிருஷ்ணன்
2000க்கு பின் தமிழ் இலக்கிய உலகம்
2000க்கு பின்னான தமிழ் இலக்கிய விரிவிற்கு இணையத்தின் பெருக்கமும், அச்சு ஊடகத்தின் எளிமையாக்கமும் முக்கிய காரணங்களாக சொல்ல வேண்டும். இணையத்தின் வாயிலாக வாசிப்பின் எல்லை விரிவடைந்தது. வாசகர்களின் நெருக்கம் அதிகமாக, விவாதங்களும் அதிகரித்தன. எல்லா முக்கிய சிறுகதைகதைகளும், சிறுகதையின் சூட்சமங்கள் எளிதாக வாசிப்பாளர்களிடமும் சென்று சேர்ந்தன. புதுமைப்பித்தன் மீண்டும் மறுவாசிப்பு உள்ளானார்.
நாற்கூற்று மருத்துவம் – இல.மகாதேவன் நேர்காணல் நூல்
குருவிடம் சென்று பயிலும் ஆர்வமோ வாய்ப்போ இல்லாமை போன்ற பல காரணங்களால் கல்லூரிப்படிப்பில் முழுமையான பயனை மாணவர்களால் பெற முடியாது என்கிறார் மகாதேவன். பொறியியல் போன்ற துறையிலும் இப்படிப்பட்ட போதாமைகளை நம்மால் பார்க்க முடிகிறது. விஞ்ஞானப் படிப்பின் அடிப்படைகள் பற்றி ஆர்வம் இல்லாததும், பயிற்சியாக எதையும் செய்யாமல் ஏட்டுப்படிப்பாக மட்டுமே இருக்கும் கல்வி அமைப்பின் சிக்கல்கள் இதோடு ஒத்துப்போகின்றன. ஆயுர்வேத மூல நூல்கள் சமஸ்கிருதத்தில் இருப்பது கூடுதல் சிக்கல். ஆனாலும் அது கடக்க முடியாத சிக்கல் அல்ல என்பதே மகாதேவனின் வாதம். ஆயுர்வேதம் போன்ற பன்முக ஞானத் தேவை இருக்கும் துறை, பிற அறிவுத் துறையிலிருந்து பலவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது அவரது அனுபவ அறிவு.
மரணமின்மை எனும் மானுடக் கனவு
“ஒருவனுக்கு நீண்ட ஆயுள் என்றால் அவனுக்கு ஆரோக்கிய வாழ்வென்பதன்று. அப்படிக் குறைந்த ஆயுள் உள்ளவன் என்றால், அவன் ஆரோக்கியமாக இருக்கமாட்டான் என்று அர்த்தமன்று. வாழ்வில் தூய்மையுடன் காலங்கழிப்பவனே ஆரோக்கியம் நிரம்பியவனாவான்” என நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பையும் முரண்பாடையும் சுட்டிக்காட்டுகிறார்.
அகல் விளக்குகள் வெளிச்சத்தினூடே விரியும் அழியாச் சித்திரம்
இத்தனை கடுமையான எதிர் கொள்ளவேண்டியிருக்கும் சவால்களுக்கு, சோதனைகளுக்கு மத்தியில் காந்தி போன்ற ஒருவருக்கு நகைச்சுவை உணர்வு உண்டு, முக்கியமாகச் சுய எள்ளல் உண்டு என்பதே முதலில் ஆச்சரியமான விஷயம். ஆனால் சற்று யோசித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்பது புரியும்.
யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்
சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் நாவலை ஒவ்வோர் அத்தியாயமாக அவர் அனுப்பும்போது படித்திருந்தேன். முழு நாவலாக வெளியான பின்னர், ஒரு முறை முழுவதாகவும் சில பகுதிகளைத் தனித்தனியேயும் படித்திருக்கிறேன். சுனிலின் சிறுகதைகளையும் தொடர்ந்து படித்துவந்ததிலிருந்து அவரது கதைசொல்லும் பாணி எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக ஆகியிருக்கிறது. அதற்கான அடுத்தகட்டச் சாட்சியாக “யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்”
ஈதே மூதுரையாகட்டும்: சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்
வெவ்வேறு சட்டகக் கதையாடல்கள், கதைக்குள் கதைகள், அறச் சிக்கல்கள், வம்ச விருத்தி… இனி வருவதை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கான சாத்தியங்களை வழிகாட்டும் (அல்லது கட்டுப்படுத்தும்), கதையாடல் உத்திகள் நாவலின் துவக்கத்திலேயே, அதன் அரங்கேற்ற வேளையிலேயே, அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன.
அறிவிப்புகள்
சொல்வனம் இதழில் 2012 ஆம் ஆண்டு முதல் பல கட்டுரைகளும், சிறுகதைகளும் நரோபா எனும் புனைப்பெயரில் எழுதி வரும் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது கிடைத்துள்ள செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் சொல்வனம் பெரு மகிழ்ச்சி கொள்கிறது.