செந்தில் இப்படி ஒரு கேள்வியை கவுண்டமணியிடம் கேட்டால், “ஏண்டா மாங்கா தலையா, உருப்படியான பழமொழிய இப்படியாடா நாசம் பண்ணுவே?” என்று அவர் திரும்பக்கேட்கலாம். அதற்கு செந்தில், “நான் நாசம் பண்ணலைண்ணே. புதுசா வந்திருக்கிற கம்ப்யூட்டர்தான் இப்படி பழமொழியை பாதியாக்கிருச்சாம்”, என்று பதில் சொல்லலாம். கணினி என்றால் ஓரமாய் உட்கார்ந்துகொண்டு “அண்ணே, சித்திரமும் நாப்பழக்கமாண்ணே?!”
Tag: சுந்தர் வேதாந்தம்
பரோபகாரம் – நம்பகத்தன்மை
உலகின் பல நாடுகளில் ஒரு நாளைக்கு $2க்கும் குறைவான பணத்தில் வாழும் ஏழை மக்கள், மாத அல்லது வார சம்பளம் பெறுபவர்கள் இல்லை. அவர்கள் வருமானம் நாளுக்கு நாள் நிறைய வேறுபடுகிறது. நுண்கடன் அமைப்புகளால் அவர்கள் வருவாயை சீராக்க முடிந்தால் அதுவே அவர்களுக்கு பெரிய உபகாரமாக இருக்கும். அவர்களுக்கு நூறு ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, கட்டணங்களுடன் நூற்றி நாற்பது ரூபாயை திருப்பி கொடுத்தே ஆக வேண்டும் என்று அவர்கள் கழுத்தில் கை வைப்பதை விட, அத்தகைய சீரான வருவாய் நிலையை அடைய சேமிக்க உதவுதல், காப்புறுதி வழங்குதல் போன்ற உதவிகள் பன்மடங்கு பலனைத் தரும் என்கிறார் ரூட்மேன்.
பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு
சுமார் 32 வருடங்களுக்கு முன், 1988 வாக்கில் மும்பையில் இருந்து சென்னை (அன்றைய வழக்கில் பம்பாயிலிருந்து மெட்ராஸ்) வருவதற்கான ரயிலைப் பிடிக்க விக்டோரியா டெர்மினஸ் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தேன். நல்ல உடை, ஷூ அணிந்து தலை வாரி, ஷேவ் செய்து கொண்டு பார்க்க டீசண்ட்டாக இருந்த ஓர் இளைஞர் “பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு”
கொரொனா தடுப்பூசி
ஃபைசர் (Pfizer) நிறுவனத்தின் மருந்து -70 டிகிரி செல்ஷியஸ் உறைநிலையிலும் மாடெர்னா நிறுவனத்தின் மருந்து -20 டிகிரி செல்ஷியஸ் உறைநிலையிலும் தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டும். -20 டிகிரி வேண்டுமானால் நம்ம வீட்டு ஃபிரிஜ் லெவல்தான் என்று சொல்லலாம். ஆனால் -70 டிகிரி செல்ஷியஸ் என்பது அண்டார்டிகா உறைபனியின் வெப்ப நிலையைவிடக் கம்மி. அந்த அளவு தாழ்ந்த வெப்பநிலையை விடாமல் பராமரிக்கும் இயந்திரங்கள் உலகெங்கும் எளிதில் கிடைக்குமா என்பது அவிழ்க்கப்படவேண்டிய பெரிய முடிச்சு.
அந்தக்காலத்து தீபாவளி
Any sufficiently advanced technology is indistinguishable from magic. – Arthur C. Clarke தீபாவளி சமயத்தில் ஒவ்வொரு வருடமும் அந்தக்காலத்தில் இந்தப் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவோம் என்று விவரித்து ஒரு சிறுகதையோ கட்டுரையோ வந்து சேரும். அந்தக்காலம் என்று கருதப்படுவது ஒரு நாற்பது ஐம்பது வருடங்களுக்கு “அந்தக்காலத்து தீபாவளி”
யோக்காய்
ஆனால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இநோயு என்ரியோ என்ற ஒரு விஞ்ஞானி இந்த தத்துபித்து விஷயங்களில் இருந்து வெளிவந்தால்தான் ஜப்பான் ஐரோப்பிய நாடுகளைப் போல விஞ்ஞான வளர்ச்சியடைய முடியும் என்று முடிவு செய்து, ஒவ்வொரு பழங்கதையாய் உடைத்து நொறுக்கி, நிறைய சொற்பொழிவுகள் நிகழ்த்தி, கட்டுரைகள் எழுதி ஜப்பானிய சமூகத்தை யோக்காய்களின் பிடியில் இருந்து விடுவித்தார்….ஆங்காங்கே சில நிகழ்வுகளை விளக்கவும், தெரிந்த பிடித்த யோகாய்களை மறந்துவிட மனமில்லாத சமூகத்தாலும், இன்றும் பற்பல யோக்காய்கள் அங்கே சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.
சொல்வனம் வழங்கும்.. (பகுதி 2)
பதினான்கு அத்தியாயங்களுடன் வெளி வந்திருக்கும் இந்தப் புத்தகம் தத்துவம், கணிதம், கணினியியல், இயற்பியல், பெண்ணியம், வணிகவியல், மருத்துவம், ஜனநாயகம் முதலிய பல துறைகளில் புகுந்து ஆங்காங்கே நிலவும் பிரச்சினைகளை அலசுகிறது. வாரக்கணக்கில் குடும்பத்துடன் வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் இந்த சமயத்தில் மிக எளிய நடையில் பள்ளிக் குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும் வடிவில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், சுவையான விவாதங்களுக்கு தீனி போடும்.
புத்தக விமர்சனம்: வாஸ்லாவ் ஸ்மீல் Energy and Civilization -A History
ஆசிரியர் உண்மையிலேயே ஒரு பெரிய நிபுணர்தான். எடுத்துக்காட்டாக, நிலத்தில் ஓடும் மனிதர்களைப் பற்றி பேசும்போது, தரவை அவர் இவ்வாறு பகுப்பாய்வு செய்கிறார்: ஓடுவதற்கு பெரும்பாலும் 700 முதல் 1,400 வாட் வரை ஆற்றல் தேவைப்படுகிறது, இது அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதத்தைப்போல் 10-20 மடங்கு அதிகம். மனிதர்களுக்கான இயங்கும் ஆற்றல் செலவு நிறைய. ஆனால் இந்த செலவை வேகத்திலிருந்து விலக்குவதற்கான தனித்துவமான திறனை மக்கள் கொண்டுள்ளனர். இயங்கும் மொத்த செலவில் 80% உடல் எடை ஆதரவு மற்றும் முன்னோக்கி நம்மைச் செலுத்தும் உந்துவிசைக்கே ஆகிறது. கால்களை முன்னும் பின்னுமாக இயக்குவதற்கு 7% செலவு. பக்கவாட்டு சமநிலையை பராமரித்தலுக்கு 2%. ஆனால் கைகளை ஆட்டி பேலன்ஸ் செய்வது ஒட்டுமொத்த செலவை சுமார் 3% குறைக்கிறது.
குடிபுகல் சிக்கல்கள் – சாத்தியமான தீர்வுகள் (குடிபுகல் – பாகம் 1)
குறிப்பிட்ட ஒரு தேசம் அல்லது சமூகத்தில் உள்ள ஒரு சமயக் குழு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி, அதனுடன் போட்டியிடும் பிற சமூகக் குழுக்கள் தம்மை அச்சுறுத்துவதாக அவை எளிதில் கருதக்கூடும். அப்படிப்பட்ட அச்சங்கள் நியாயமாய் இருப்பதற்கான போதிய வரலாற்றுச் சான்றுகள் கூட இருக்கவே செய்கின்றன. அமெரிக்காவில் கணிசமான அளவில் வாழும் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட கிறித்துவர்கள் தம் உரிமைகளும் விழுமியங்களும் எப்போதும் ஆபத்தில் இருப்பதாய் உணர்கிறார்கள். நூற்று இருபது லட்சம் பேர் கொண்ட இந்தியாவில் எண்பது சதவிகிதத்தினர் இந்துக்கள். ஆனால் அவர்களில் பலர் தம் சமயம் ஆபத்தில் இருப்பதாய் நினைப்பதோடு எதிர்த்து நின்றுதான் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்வு பூர்வமாய் நம்புகிறார்கள். இது போலவே உலகில் வேறு பகுதிகளில் உள்ள யூதர்கள், முஸ்லிம்கள், மற்றும் பிறர், தம் தேசத்தில் பெரும்பான்மையினராய் இருந்தாலும் பிறரது அச்சுறுத்தலை உணர்கிறார்கள்.