சீனக் கவிஞரான வாங் வீ (701–762), மத்திய சீனாவிலுள்ள ஷென்சி நகரில் பிறந்தவர். பன்முகத் திறன் கொண்டவர். இசைக் கலைஞராகவும், அழகிய கையெழுத்தாளராகவும், சிறந்த ஓவியராகவும், அரசியல்வாதியாகவும் அறியப்பட்டவர். லி பய், டு ஃபூ ஆகிய இருவரோடு, டாங் வம்சத்தின் ஆரம்பக் கால மூன்று முக்கியக் கவிஞர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டவர். இவரது கவிதைகள் 420 வரையிலும் பாதுகாக்கப் பட்டுள்ளன. “முன்னூறு டாங் கவிதைகள்” எனும் பிரபலமான 18_ஆம் நூற்றாண்டின் பாடல் திரட்டில் இவரது 29 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.