கிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்

மேற்கு வங்கத்தின் சந்தன்நகரில் பிறந்த கிருஷ்ண பாசு, தன்னுடைய பதினொரு வயதிலேயே முன்னணி வங்க மொழி இதழ்களான ஏக்‌ஷாத், தேஷ், கீர்திபாஷ், அம்ருதோ ஆகியவற்றில் படைப்புகளை வெளியிட்டதன் மூலம் தன் கவி வாழ்வைத் தொடங்கினார். அவரது தனிக் கவிதைகளின் முதல் தொகுப்பு 1976-இல் வெளியானது. அன்று தொடங்கி, அதிசயிக்கச் செய்யும்விதமாக, மேலும் 18 தொகுப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

சுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் எப்படி வெற்றி பெற்றுவருகிறார்கள், ஆண் ஆதிக்கத்தை எப்படிக் கடந்துவருகிறார்கள் என்பதைப் பற்றிய குறிப்பு அதில் வெளியாகி இருந்தது. கவிதை வாசிப்பதில் பிரதீப் கோஷும் ஜகந்நாத் கோஷும் மிகப் பிரபலமானவர்கள், ஆனால் பிரதிபுலி கங்கோபாத்யாய் அவர்களை முந்திவிட்டார் என்று அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அதேபோல் இலக்கியத்தில் சுசித்ரா பட்டாச்சாரியாவின் புகழ், சுநீல் கங்கோபாத்யாயின் புகழுக்கு எந்த அளவும் குறைவானதில்லை. கல்கட்டா நோட்புக்கில் எழுதியிருக்கிறார்கள். அதைப் பார்த்து நான் மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.

நேர்காணல்: மல்லிகா சென்குப்தா

பெரும்பாலானவை சிற்றிதழ்களே; அதாவது சாதாரண நிலைமையில் இருப்பவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து கொண்டுவருபவை. மேற்கு வங்கத்தில் மிக வளமான சிற்றிதழ் பாரம்பரியத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம். ஆண்டு முழுவதும் வெளிவரும் ஆயிரக்கணக்கான சிற்றிதழ்களும் அரசாங்கமும் ஒன்றிணைந்து நடத்தும் சிற்றிதழ் கண்காட்சி இங்குண்டு. ஆக … நாங்கள் எல்லோரும், எல்லாக் கவிஞர்களும் பெரும்பாலும் சிற்றிதழ்களில்தாம் எழுதுகிறோம், ஐந்தாறு அல்லது எட்டு பத்து கவிதைகள் மட்டுமே பெரிய இதழ்களில் ஆண்டுதோறும் வெளியாகும். ஆக பெரிய இதழ்கள் என்று பார்த்தால் வெகு சில இதழ்கள்தாம் உண்டு. ஒரு வகையில் தேஷ் ஏகபோகமாகச் செயல்படுகிறது. பெரிய இதழ்களுக்கும் அவர்களுக்கேயான அரசியல் உண்டு. [படைப்புகளை வெளியிட] உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். ஆக, நான் சொல்ல வருவது என்னவென்றால், கவிதை சிற்றிதழ்கள் மூலம் வாழ்கிறது