அறிவின் தேடலில் ஈடுபடுபவர்கள் தங்களின் தேடலில் தெளிவு பெற அவர்கள் ஆராயும் விஷயத்தை ஒரு புனைவு தருணத்திற்குள் வைத்துப்பார்ப்பது வழக்கம். Thought experiment என்ற இந்த முறை நாம் வழக்கமாக அடைந்திருக்கும் பழக்கப்பட்ட பார்வைகளை உதறிவிட்டு புதிய பார்வைகளைப் பெற உதவுகிறது. பல சிந்தனைச் சோதனைகள் அதைப் படைத்தவருக்கு புதுப்பார்வைகளைப் பெற உதவுவதுடன் காலத்திலும் புதிராக நிலைத்துவிடுகின்றன. இவ்வகைச் சிந்தனைச் சோதனைகள் புனைவை படைப்பவர்களுக்குப் புனைவிற்கான விதையாக அமைகின்றன்.