மான மாத்ரு மேயே மாயே

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான திரு. முத்துஸ்வாமி தீக்ஷிதர் பல அபூர்வ இராகங்களைக் கையாண்டு முத்தான கீர்த்தனைகள் படைத்தவர். மும்மூர்த்திகளில் பாரதத்தில் பெரும்பாலான இடங்களுக்குப் பயணித்தவரும் அவர்தான். அந்தந்தப் பிரதேசத்தின் சிறப்பு இராகங்களைக் கையாண்டு கர்னாடக இசைக்கு ஏற்றவாறு கீர்த்தனைகளை இயற்றினார். அவரது பாடல்களில் ‘குருகுஹ’ என்ற முத்திரையும், பாடப்படும் தெய்வத்தின் மூர்த்தியும், கீர்த்தியும், அந்தத் தலத்தின் வரலாறும், அதன் பூகோள அமைப்பும், அதன் முக்கிய பீஜாக்ஷரமந்திரமும் இடம் பெறும். மேலும், அந்தக் கீர்த்தனை எந்த இராகத்தில் பாடப்பட்டுள்ளது என்பதும் தெளிவாக வந்துவிடும்.