இது ஒன்றும் மனிதச் சோதனைச் சாலை அன்று. இந்த அமிலத்தன்மை மனிதனால், ஒரே நாளில் உருவாக்கப்பட்டதும் அன்று. உயிரினங்கள், மீண்டும் பழையபடி ஏரிகளில் வாழ, அந்த உணவுச் சங்கிலி உருவாக்கப்பட வேண்டும். அது நம்மால் இயலாத காரியம். அது இயற்கையின் டிபார்ட்மெண்ட்! நாம் அவசரமாகத் தலையிட்டதற்காக, இயற்கை ஒன்றும் உடனே சரி செய்யப் போவதுமில்லை.
Tag: சக்தி விஞ்ஞானம்
சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை
1960 –களில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மண்ணியல் விஞ்ஞானி (soil scientist) ஸ்வென் ஓடன் (Sven Oden) தனது நாட்டில் மழையில் அமிலம், அதுவும் கந்தக மற்றும் நைட்ரிக் அமிலம் கூடுவதைப் பல்வேறு மண் சோதனைகள் வழியே ஆராய்ந்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டார். ..இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய ஐரோப்பிய அனல் மின்நிலையங்கள் கரியை எரிப்பதால், காற்று வழியாக, ஸ்வீடனின் காற்று மற்றும் மழை மாசுபடுவதை தகுந்த ஆதாரங்களுடன் ஐக்கிய நாடுகள் கருத்தரங்கில் முன் வைத்தார்.