Nature’s Mutiny (இயற்கையின் கலகம் ) என்னும் இந் நூலின் போக்கில் பழக்கப்படாத கடுங்குளிர் காலநிலை என்ற பாடத்தைக கடந்தும் கணிசமான தூரம் பயணிக்கிறோம். . புவி முன்பை விட குளிரடைந்தது என்று நிச்சயமாக அறிந்துள்ளோம்: முந்திய கால வெப்பநிலைகளை மதிப்பிடுவதற்குரிய பல்வகை நுணுக்கங்கள்- எடுத்துக் காட்டாக ஐஸ் உள்ளகங்கள்(ice cores) மற்றும் மர வளையமுறை, (tree rings method)-மூலம் அதற்கான ஆதாரம் காண முடியும். மேலும் கடிதங்கள், நாட்குறிப்புகள், விளக்கப் பேருரைகள் (sermons) ,மது உற்பத்தியாளர்களின் பதிவுகள் போன்ற பற்பல வடிவங்களில் குளிர் தாக்கம் குறித்த விரிவான கையெழுத்து வர்ணனைகள் உள்ளன.
Tag: கோரா
சோசியலிசம்: நிறுவனங்களை பலவீனப்படுத்துவதா?
அவர் நாடும் சோசியலிசம் நிறுவனங்களை பலவீனப்படுத்துவது அல்லது அதற்கு மேலும் சென்று அவற்றை அழிப்பது ஆகிய வழிமுறைகளைக் கையாளுவதில்லை. அல்லது அதில் அடிப்படையாகவே புதிய ஆளுகைக் கருவிகள் கொண்டுவரப்படும் என்ற கற்பனைகளும் இல்லை. நடப்பில் உள்ள இயங்கமைவுகள் (mechanisms) மற்றும் குறியீடுகள் (indices) -வரிவிதிப்பு, மக்களுக்காக செலவிடுதல், பெருநிறுவனத்தின் நிர்வாகக் குழு, பொருளாதாரப் புள்ளி விவரங்கள், உயர் கல்வி, யூரோப் ஒன்றியம்,மத்திய ரிசர்வு அமைப்பு – ஆகியவற்றை மாற்றியமைத்து புதிய சமத்துவ நியாயத்தைப் (Egalitarian Logic ) பின்பற்றச் செய்வதே அவர் நோக்கம்.
சமூக ஒழுங்குகளும் அரசியல் நிறுவனங்களுமே ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம்?
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இதற்கெல்லாம் பல்துறை இணைவுப் (interdisciplinary) படைப்பால் மட்டுமே விளக்கம் தர முடியும் . அதையேதான் (அவர் எழுதிய) காபிடல் அண்ட் ஐடியாலஜி (போதுமான அளவு பாராட்டுப் பெறாத நூல்) என்னும் பகுப்பாய்வு மற்றும் முறையியல்சார் (analytical and methodological) திருப்புமுனைப் படைப்பு வழங்கி இருக்கிறது “சமூக ஒழுங்குகளும் அரசியல் நிறுவனங்களுமே ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம்?”
சோசலிசத்துக்கான நேரம்
ஏற்றத்தாழ்வை ஆழமாக்கும் போக்கைக் கொண்ட முதலிய மனோபாவம் பெருந்தொய்வின் (Great Depression) பின்விளைவாக தற்காலிகமாக தலைகீழ் மாற்றம் பெற்று அகண்ட நடுத்தர வர்க்க உருவாக்கலை சாத்தியமாக்கியது. ஆனால் பின்னர் வந்த உலகமயமாக்கல் (globalisation)காலத்தில் முதலியம் பழிவாங்கும் விதமாகத் திரும்பி வந்து தன் வழக்கமான போக்கைத் தொடர்ந்தது.
பனியூழிகள்-கண்டுபிடிப்பும் ஆய்வுகளும்
நீண்டகாலத் தாழ்வெப்பநிலை காரணமாகப் புவியின் கணிசமான நிலப் பரப்புகள் சில/பல மில்லியன் ஆண்டுகள் உறைபனியால் மூடிக் கிடந்த காலங்களில் ஐஸ் ஏஜஸ் (ice ages) எனப்படும் பனியூழிகள் சம்பவித்தன. பனியூழி என்ற சொல்லாடல், தோலாடை அணிந்த கற்கால மனிதன் உணவு தேடி, பனிபடர்ந்த விரிந்த நிலப்பரப்பில் முற்றிலும் நம்பிக்கை இழந்தவனாக அலைந்து திரியும் காட்சியை உங்கள் மனக்கண் முன் நிறுத்தக் கூடும். ஆனால் மனித இனம் தோன்றி ஓங்கி உயர்ந்தது எல்லாம் கடந்த 300000 (3 லட்சம் ) ஆண்டுகளுக்குள் தான். அதற்கு முன்பே பெரும்பாலான பனியூழிகள் முடிந்து விட்டன.
மணல் கூட ஒரு நாள் தீர்ந்து போகலாம்!
உலகில் மிகவும் அதிகமாக அகற்றப்படும் திடப்பொருளாகவும் , உலகின் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் இயற்கை வளங்களில் நீருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும் இருக்கும் மணலின் பயன்பாடு மொத்தத்தில் முறைப்படுத்தப் படாமலேயே இருந்து வருகிறது. இதனால் கடந்த பல நூறு ஆயிரம் ஆண்டுகளில் நிதானமான புவியியல் நடைமுறைகளால் உருவாக்கப்பட்டு வந்துள்ள மணல் வளம், இன்று ஈடு செய்து கொள்ளப் பட முடியாத அளவில் உற்பத்தி விகிதத்தை விட மிக அதிக வேகத்தில் நம்மால் நுகரப் பட்டு வருகிறது என்றே பொருள் கொள்ள வேண்டும்.
குரங்குகளுக்குத் தீனி அளித்தால் வனங்கள் அழியுமா?
இருப்பினும் தாய்லாந்தின் லோப்புரியில் (lopbury ) இருந்து வந்த ஒரு காணொளிப் பதிவு பிரளயத்தைப் போன்ற காட்சியை சித்தரித்தது. நூற்றுக் கணக்கில் மக்காக் எனப்படும் நீண்ட வால் குரங்குகள் தெருக்களில் தெரிவதையும் ,அவற்றின் கண்ணில் பட்ட துர்பாக்கியசாலியிடமிருந்து ஏதாவது உணவுப் பொருள் துணுக்குகளைப் பறித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு அவனை விடாமல் தூரத்துவதையும் காணொளி காட்டியது. இக்குரங்குகள் சுற்றுலாப் பயணிகளிடம் உணவுப் பொருள் பெறுவதைப் பழக்கமாகக் கொண்டவை. அதன் விளைவாக கோயில் இடிபாடுகளைச் சுற்றி ஒரு வெற்றிகரமான விலங்கு உணவளிப்புத் தொழில் உருவாகி இருந்தது. பெருந்தொற்று உண்டாக்கிய லாக்டௌன்கள் மற்றும் பயணத் தடைகளால் இது போன்ற சுலப உணவு ஆதாரங்கள் காணாமல் போய்விட்டன. மனிதரைச் சார்ந்து வாழும் குரங்குகள் வேறு வழியின்றி தெருக்களை ஆக்கிரமித்தன..
ஈக்கோசிஸ்டம் (சூழல்சார் தொகுதி)
ஈக்கோசிஸ்டம் (Ecosystem ) என்னும் சொல், சூழல்சார் தொகுதியைக் குறிக்கிறது. சூழலியல் (Ecology) என்பது சூழல் தொகுதிகள் பற்றிய கல்வி. ஈக்கோ சிஸ்டங்கள், இயற்கை வாழ்விடம் (Habitat), சூழல் உயிரினக் குழுமம் (Biome ), மற்றும் உயிர்க்கோளம் (Biosphere ) என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. ஈக்கோ சிஸ்டம் என்னும் சொல்லுக்கு, Oxford Languages தரும் அதிகார பூர்வ வரையறுப்பு: இடைவினைகள் (interactions) மேற்கொள்ளும் உயிரினங்களையும் (தாவரங்கள், விலங்குகள் மற்றும் சிதைப்புயிரிகள் ) அவற்றின் பௌதீக (உயிரற்ற) சுற்றுச்சூழலையும் (காற்று, நீர் மற்றும் மண் ) உள்ளடக்கிய ஓரிடத்து உயிரிய சமூகம்.
ஏரோசால் (தூசிப் படலம்)
எல்லாவகை ஏரோசால்களும் சூழலுக்கு ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
கடல் உப்பு அடிப்படை கொண்ட வெளிர் நிற ஏரோசால்கள் ஒளியை பிரதிபலிக்கக் கூடியவை. இவை பூமியைக் குளிர்விக்கின்றன.
காட்டுத்தீ கக்கும் ஒளிர் கருநிற (jet -black ) புகைக்கரி சூரிய வெப்பத்தை கிரகித்துக் கொள்கிறது. அதிக உயரப் பிரதேசங்களில் ஏரோசால் இதைச் செய்வதால் குறைவான வெப்பமே நிலப் பரப்பைத் தாக்குகிறது. கருத்த ஏரோசால் வெண்பனி மற்றும் பனிப் பொழிவுகளைக் கருப்பாக்கி விடுகிறது. அதனால் அவற்றின் ஒளி திருப்பும் திறன் (albedo) குறைந்து பனி உருக ஆரம்பிக்கிறது.
அருந்ததி சுப்ரமணியம் கவிதைகள்
இலேசாக நான் பாவிக்க முடியும் ஒரு வீடு,
நேற்றைய உரையாடல்கள்
அடைக்காத அறைகள், அவற்றில்
பிளவுகளை நிரப்ப என் தன்மை
உப்பத் தேவையின்றி.
மொபைல் தொடர்பாடல் வரலாறு- பகுதி 3- 3G
யூரோப்பிய நாடுகளில் 3G உரிமங்களுக்கு அலைக்கற்றையை ஏல முறையில் விற்றதுவே தொலைத்தொடர்பு தொழிலையே பாதித்த முக்கிய விபரீத சம்பவங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. 2000களின் ஆரம்பத்தில் யூரோப் முழுதும் 3G அலைக்கற்றை ஏலமுறை விற்பனை ஆரம்பிக்கப் பட்டது. அலைக்கற்றை விலை இயக்குனர்களால் (operators) தாங்க முடியாத அளவில் இருக்கும் என்று கருதப் பட்டதால் இதற்கு முன்பே இதே போன்ற 3G அலைக்கற்றை ஏல விற்பனை அமெரிக்காவில் கைவிடப் பட்டிருந்தது.
பண்டைச் சீன இலக்கியம் (Pre -Qin காலம்)
கின்வம்சத்துக்கு முந்திய நூல்களில், Classic of Mountains and Seas தான் கிட்டத்தட்ட நூறு பழமையான தொன்மங்களின் விவரங்களைக் கொண்ட மிகு வளமான மூலநூல். கீழ்காணும் நான்கு மிகவும் பரிச்சயமான கதைகளையும் அது உள்ளடக்கி இருக்கிறது….இந்த அழகிய கட்டுக் கதைகள் அளித்த வளமான உள்ளூக்கம், பிற்கால இலக்கியம் மீது நீண்ட கால தாக்கம் கொண்டிருந்தது.
புவிக்கோளின் கனிமவளம்
இந்த மூன்றாவது கோளில் (புவி ) என்ன அதிசயம்? அதன் உடன் பிறப்புகளின் வளர்ச்சிப் பாதையை விட்டு விலகி வியத்தகு முறையில் பிரிந்து செல்வது ஏன் ? தண்ணீர் தான் காரணம் என்பது உங்கள் இனிய அழகிய அனுமானம்.
நீரில்லாத கோள்களில் உருவாக முடியாத பல்வேறு புதிய கனிமங்கள் இக்கோளில் உருவாக முடிகிறது. …இங்குள்ள அபரிமிதமான கால்சியம் கார்போனேட் (கால்சைட் என்னும் கனிமம் ) பெரும்பாலும் கோளில் வாழ்ந்த உயிரினங்கள் உருவாக்கியது எனத் தோன்றுகிறது. நீங்கள் எப்போதாகிலும் உயிரினப் பயன்பாடு இல்லாத கால்சைட் உருவாதலைக் கண்டிருக்கலாம். …இவ்வளவு கால்சைட் பாறைகள் உருவாகத் தேவையான உயிரினங்களை சாத்தியமாக்கியது இங்குள்ள பெருங்கடல்களே என்று நீங்கள் அனுமானிக்கிறீர்கள்.
பொதுமங்களும் அரசாங்கமும்
சுற்றுச் சூழல் பேரழிவுகளின் காரணமாக சர்வாதிகார அரசுகள் தங்கள் மக்களுக்கு இயற்கை வளங்களின் கடைசி துண்டங்களைப் போராடிப் பெற்றுத் தர வேண்டிய அவசியம் உருவாகி ஒரு வித சூழல் பாசிசத்துக்குக் (ecofacism) கூட வழி நடத்தப்படலாம்; உண்மையில் சமனற்ற கொரோனா தடுப்பூசி விநியோகம் இதை முன் கூட்டியே உலகுக்கு உணர்த்தி விட்டது….எனினும் இதே காரணங்களுக்காகத்தான் அரசியல் மற்றும் கொள்கைகள் சார்ந்த போராட்டம் நிகழ்த்தும் ஒரு முக்கிய செயற்களமாக அரசு நிலைத்திருக்கிறது. எனவே அரசு ஒரு மிகையான அமைப்பு அல்லது இயல்பாகவே அது ஒரு மக்கள் விரோத அமைப்பு என்று காட்டுவது விவேகமற்ற நடத்தை என்று உணர்ந்து பொதும உந்தம் (momentum) செயல்பாட்டாளர்கள் அரசு எதிர்ப்பைக் கைவிட வேண்டும்.
சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு
இனவிருத்திக்களம் பரம்பரைப் பழக்கமாக பொதுமங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. அடிப்படையாகவே அது உயிரைப் பேணிப் பாதுகாக்கும் பணி. எனவே சந்ததிகள் உருவாக்க உழைப்பிற்குத் (reproductive labour) தலையாயவர் என்கிற வகையில் பெண்ணுக்கு பொதுமங்களுடன் திடமான இணைப்பு நிலவுகிறது; வரலாற்றில் பெண்கள் பெரும்பாலும் பொதுமங்களின் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். பின்னர் அந்த இணைப்பு பறிபோனதால் மிகுந்த வேதனைக்குள்ளானார்கள்.
முதலியத்தை எதிர்க்கும் பொதுமம் – பகுதி 2
பாட்டாளி வர்க்கம் மையமாக்கலைத் தோற்கடித்து பொதுமங்களை மீட்கும் என்று மார்க்ஸ் நம்புகிறார். இதைத் திட்டவட்டமாக மறுக்கும் நூலாசிரியர்கள், பொதுச்சொத்து நிர்வாகம் சமூகத் தீர்வு காணலுக்கு உட்பட்டு இயங்க வேண்டும் என்கிறார்கள் ஒவ்வொரு மையப்படுத்தப் பட்ட அரசும், கம்யூனிச அமைப்பும் பொதுமக் கொள்கைக்கு எதிரானது என்பது அவர்கள் கருத்து.
முதலியத்தை எதிர்க்கும் பொதுமம்
நீரும் காற்றும் தாராளமாகக் கிடைக்கின்ற வற்றாத வளங்களாக இருப்பதால் அவை பொது நுகர் பொருளாக நீடிக்கின்றன என்று காலங்காலமாக நினைத்திருந்தோம். ஆனால் பிரத்யேகமான கொள்கலனில் இருக்கும்போதுதான் தண்ணீர் தனியார் சொத்தாக முடியும் என்கிறார் ஹியூகோ டே க்ரோட். அதாவது பாட்டிலில் அடைக்கப் பட்ட கனிம நீர் வருகைக்கு நுகர்வோரே காரணம் என்கிறார்.
மூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்
ஆறு கற்கள் : Ao நாகர்கள் வட கிழக்கு இந்தியா நாகலாந்தின் மொகோக்சுங் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட பெரும்பான்மை நாகர் இனப் பிரிவு. Ao நாகா தொன்மத்தின் படி அவர்களின் மூதாதையர் (ஆண் -3, பெண் -3) ஆறு கற்களில் இருந்து உதித்தவர்கள். அவர்கள் இயற்கையை வழிபட்டனர்.
அணுக்கரு இணைவு – கதிரவனைப் படியெடுத்தல்
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சோலார் நெபுலா எனப்படும் வாயு மற்றும் துகள்கள் நிறைந்த சுழலும் பெரு மேகம், வரம்பு மீறிய ஈர்ப்பு விசையால் தகர்ந்து, பின் தற்சுழற்சியால் தட்டையான வட்டத் தட்டாகிப் பெரும்பாலான (99.8%) உட்பொருட்கள் தட்டின் மையத்துக்கு ஈர்க்கப்பட்டுப்பின் அந்த மையமே சூரியனாகியது.
மனச் சோர்வைக் குணப்படுத்தும் மேஜிக் காளான்கள்
மிதமானது முதல் கடுமையானது வரையான பெரும் மன அழுத்தச் சீர்குலைவுகளுக்குச் சைலோசிபின்னுடன் உளவியல்சார் சிகிச்சை முறைகளையும் இணைத்து சிகிச்சை அளிக்கும்போது, இரண்டு டோஸ் சைலோசிபின் மருந்து, பொதுவான மனச்சோர்வு முறிமருந்தான எஸ்சிடாலொப்ரம் (escitalopram) அளவுக்குச் சம ஆற்றல் உடையதாகத் தோன்றுகிறது என்று இரண்டாம் கட்ட மருத்துவ முயற்சியில் எட்டப்பட்ட முடிவுகள் கூறுகின்றன.
கரிமக் கவர்வு (Carbon Capture) எந்திரங்கள் கண்காட்சி
படிம (fossil) எரிபொருட்கள் பயன்பாட்டால் ஆண்டுக்கு 50 பில்லியன் டன் கரிமம் வளிமண்டலத்தில் சேர்கிறது. ஆனால் கரிமக் கவர்வுக் கருவிகளால் பிரித்தெடுக்க முடிவது சொற்பமே, ஈரிலக்க டன்கள் அளவைத் தாண்டாது. இருப்பினும் பசுங்குடில் வாயு உமிழ்வுக் குறைப்பினால் மட்டுமே புவி வெப்பமாதலைத் தடுத்து நிறுத்திவிட முடியாதாகையால் கரிமக் கவர்வும் தொடர வேண்டும் என்கிறார், கண்காட்சியின் நெறியாளர் வார்ட் (Ward).
புவி எனும் நம் கோளின் தனிச் சிறப்புகள்
கோள்களின் பிறப்பிடம், இளம் விண்மீன்களைச் சூழ்ந்திருக்கும் வாயு மற்றும் தூசு நிறைந்த அடர் வட்டு (disk) என்று விண்வெளி ஆய்வாளர்கள் அறிந்துள்ளார்கள்.
புவிக்கோளின் நான்கு வடமுனைகள்
நிலவியல் பதிவுகளின்படி, புவிக்கோளின் நெடு வரலாற்றில் இதுவரை 183 முறை புவியின் காந்தப்புலம் தலைகீழாக மாறியிருக்கிறது; வெகு அண்மைய மாற்றம் சுமார் 780,000 ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்டது. சூரியனின் காந்தப் புலத்திலும் இதைப்போன்ற தலைகீழ் மாற்றங்கள் நேர்வதுண்டு.
புலம்பெயரும் பவளப்பாறைகள்
பவளப்பாறைகள் பாறை வகைகளில் ஒன்றல்ல. சில வகைக் கடலினங்களின் வாழ்ந்து முடிந்த எச்சங்களும் வாழ்ந்துகொண்டிருக்கும் சில உயிரினங்களின் தொகுப்புகளுமே பவளப்பாறைத் திட்டுகளாகின்றன. இவை வெறும் சுண்ணாம்புத் திட்டுகள் மட்டுமே.
தானுந்து பேட்டரி மறுசுழற்சியும் காரீய நஞ்சேற்றமும்
காரீயம் எளிதில் சுவாசம் அல்லது வாய் மூலமாக உடலினுள் சென்று ரத்த ஓட்டத்தில் கலந்து உணவுப் பாதை மற்றும் மூளையில் உபாதைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிந்திருக்கின்றனர். சிறிய அளவு காரீயம்கூட இளம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, IQ, கவனம் ஆகியவற்றின் குறைபாடுகளுக்குக் காரணமாகிவிடும். காரீயம் ஒரு வலிய நரம்பு நச்சு (neurotoxin). சில நேரங்களில் வன்முறையைத் தூண்டிவிடவும்கூடும்.
மகரந்தம்
அமெரிக்க நகரங்களின் இன்றைய நிலைமை என்ன? நியூ யார்க்கில் சொகுசு அடுக்ககக் குடியிருப்பில் இருந்த பணக்கார மாணவர்கள், அதிகச் சம்பளம் பெறும் இளம் தொழில் வல்லுநர்கள் மற்றும் நகரில் இரண்டாவது வீடு வைத்திருப்போர் நகர மையங்களை விட்டகன்றனர் அல்லது செலவுகளைக் குறைத்துக்கொண்டனர். சொகுசு வீட்டு வாடகை கடந்த ஆண்டைவிட 19% குறைந்தது. அவற்றின் தேவையும் குறைந்தது.
பலகை அடித்த ஜன்னல்
மர்லாக், மர வீட்டைக் கட்டி முடித்தபின், வலிமையுடன் மரங்களைக் கோடரியால் வெட்டி வீழ்த்திப் பயிரிடும் நிலத்தை உருவாக்கிக் கொண்டான்- துணைக் கருவியாகத் துப்பாக்கியும் வைத்திருந்தான். அப்போது அவன் இளமையும் கட்டுடலும் நம்பிக்கை மிக்க எதிர்பார்ப்பும் கொண்டிருந்தான். கிழக்கு தேசத்திலிருந்து வந்தபோதே அவ்வூர் வழக்கப்படி அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது.
மனித இனம்:ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு
இதற்கு முந்திய நூலையும் – Utopia for Realists – இதே அளவுக்கு திட நம்பிக்கையைக் கொடுக்கும் வகையில் எழுதியிருக்கும் பிரெக்மேன், கோட்பாட்டளவான அறிக்கைகளை அலசிப் பார்ப்பதிலும் இடைநிகழ்வுத் துணுக்கு மணிகளைக் கண்டுபிடிப்பதிலும் மால்கம் க்ளாட்வெல்லைப்போல் அபாரத் திறமை பெற்றவர்.
மங்கோலிய நாடோடிப் படைகள் மேற்கு யூரோப்புடன் ஏன் போரிடவில்லை?
மேற்கு ஐரோப்பிய நாட்டு மக்கள் போதிய அத்தியாவசியப் பொருட்களுடன் மூடிய கோட்டைக்குள் நீண்ட முற்றுகைப் போருக்கு தயாராகி இருந்தார்கள். மங்கோலியப் படைகளுக்கு இது ஒரு புது அனுபவம். இவர்கள் பெரும்பாலும் தங்கள் இருப்பிடத்தை விட்டு பல மாதங்கள் சண்டை செய்யப் போவதால், போகுமிடமெல்லாம் உணவுக்கும் உடைமைக்கும் கொள்ளையடித்துக் கொண்டே செல்வார்கள்.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவில் பல்வேறு கற்றல் முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுள் மிக எளியது பிழை திருத்தச் சுழற்சி (trial and error ) முறை. உதாரணமாக சதுரங்க ஆட்டத்தில் இறுதி முற்றுகை இடர்ப்பாடுகளுக்கு விடை காணும் கணினியின் செய்நிரல், பல தற்செயல் நகர்வுகள் மூலமாக முயற்சித்து இறுதியில் முற்றுகைக்கு விடை காணக்கூடும்; விடை கண்ட பிறகு, நிரல் அந்த நிலைகளை நினைவகத்தில் சேமித்து வைத்துக்கொள்ளக்கூடும் .
யார் யாரை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்?
பைபர்ன் மற்றும் வில்க் கூற்றுப்படி, யு.எஸ் ஸில் பயிற்றுவிக்கப்பட்ட பெரும்பாலான
வெளிநாட்டு மானுடவியல் பட்டதாரி மாணவர்கள் களப்பணியாற்றத் தம் நாட்டுக்குப் போகவேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் பெரும்பாலும் யு.எஸ் மாணவர்கள் அமெரிக்க பண்பாட்டு ஆய்வு மேற்கொள்வது தடுக்கப்பட்டே வருகிறது.
“மானுடவியல் எவ்வளவோ முன்னேறி வந்திருக்கிறது, ஆயினும் நாம் தொடர்ந்து காலனிய விடுவிப்பு (decolonizing) திட்டத்தை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் நாம் இன்னும் நாற்றம் வீசும் பல மூட்டை முடிச்சுகளை வைத்திருக்கிறோம்” என்கிறார் வில்க்.
குணப்படுத்த இயலாதது
ஒரு நாள் என் தாயார் என்னையும் (எனக்கு 7 வயது ) என்னுடைய வேறொரு தமக்கையையும் (வயது 10) அவரைப் பார்க்க அழைத்துச் சென்றார். புதிதாக உழுது போடப்பட்டிருந்த வயலின் பக்கலில் நடந்து சென்றோம். அது இலையுதிர் காலத்து ஆழமாகப் புரட்டி உழுதல் வகை, வயல்தரையைக் கோரி வாரும் பெரிய அடிமண் கட்டிகள் மெதுவாக நொறுங்கி பொடியாக உதிர்ந்து உழுசால் நெடுகிலும் பரவுவதற்காக செய்யப்படுவது. அவை மண் சீவல்கள் என்றழைக்கப் படுகின்றன; மற்றும் அவை கிட்டத்தட்ட மிகச்சரியான வடிவ கணிதத் திண்மங்கள் போல் தோற்றமளிக்கின்றன: வெட்டிக் குறைக்கப்பட்ட சாய்சதுர அறுமுகத் திண்ம வடிவங்கள் (truncated rhombohedron)எனக் கருதுங்கள்.
தபால் பெட்டி
பாட்டி மாற்றமில்லாமல் வெண்ணிற ஆடைகளையே அணிந்தார். வயதான பெண்களிடம் சிவப்புச் சேலைகள் இருக்காதா என்று என்னை நானே அடிக்கடி கேட்டுக் கொள்வேன். ஒருநாள் பாட்டியின் பெட்டியைத் திறந்து அதன் உள்ளடக்கத்தை ஆராய்ந்தேன். அதில் வெண்ணிற ஆடைகளைத் தவிர வேறெதுவும் இல்லை. வெண்ணிற ஆடைகள் மிகத் தூய்மையானவையாகத் தோற்றமளிக்கின்றன. அந்நாளில் மக்கள் எவ்வாறு தூய்மையைப் பேணிக் காத்தனர் என்பது அற்புதமான விஷயம்.
இரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்
உணவு வங்கிகள் பெருகி, அமெரிக்காவுக்கு உணவளிப்பு (Feeding America ) என்ற புது அடையாளம் பெற்று, 200 க்கும் அதிகமான உணவு வங்கிகள் இணைந்த நாடு தழுவிய பிணையமாக வளர்ந்து, உணவு வங்கிகளை சார்ந்துள்ள பொட்டண உணவறைகள் (food pantries), சிற்றுணவகம் (soup kitchens), மற்றும் பிற சமுதாய முகமைகள் வழியாக 46 மில்லியன் மக்களுக்கு உணவளிக்கக் கூடிய லாப நோக்கில்லா பசியாற்று (hunger relief) நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இது வருவாய் நோக்கில் அமெரிக்கத் தொண்டு நிறுவனங்களில் இரண்டாமிடம் வகிப்பதாக ஃபோர்ப்ஸ் கம்பெனியின் மதிப்பீடு கூறுகிறது.
மகரந்தம்
அண்டக்கதிர்களைக் கண்டறியும் பரிசோதனையில், 2006 மற்றும் 2014-லில், பனியிலிருந்து அதிக சக்தி வாய்ந்த அண்டக்கதிர்களின் தலைகீழ் அருவியைக் கண்டறிந்தார்கள். முதலில் அதைப் பின்னணி ஓசை என்றே நினைத்தாலும், 2016-லில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அது தலைகீழ் அண்டக் கதிர்ப் பொழிவு எனச் சொன்னது. இது ஓர் இணை உலகம் இருக்கலாம் என்ற ஐயத்தினை ஏற்படுத்தியது.
சுனிதா ஜெயின் -இரு கவிதைகள்
கோடை முடிகையில்
அப்பறவைகள் இணங்கியோ பிரிந்தோ
பறக்கும் வலிமை பெற்ற இளங்குஞ்சுகள் சூழ
பறந்து போயின .
மகரந்தம்
நெடிய பாரம்பரியம் கொண்ட பறை (drum), தாளம் (Cymbal) வகை வாத்தியங்கள் பண்டைய கலாச்சாரங்கள் அனைத்திலும் இருந்தன . அவற்றை உள்வாங்கி, ஒருவரே பறையடித்து தாளமிடும் வகையில் அமெரிக்காவில் உருவானது டிரம் செட் (Drum செட்).
சுனிதா ஜெயின் -கவிதை
நீ பதினேழு வயதினள். மேலும் கன்னிமை இழந்தவள்
அவர்கள் உனக்குப் பயண ஏற்பாடு செய்கிறார்கள்,
வேறு நாட்டிலுள்ள உன் சொந்த ஊருக்கு.
அங்கே உன் உண்மையான ஆரம்பங்களின்
வேர்களை அறிந்து கொள்ளக் கூடும்.
மகரந்தம்
1811-ல் வெளியான பிரபலமான புதினம் Sense and Sensibility. ஆசிரியர் ஜேன் ஆஸ்டின். மூன்று பகுதிகள் கொண்ட இப்புதினம் 19-ஆம் நூற்றாண்டின் செவ்விலக்கியமாகக் கருதப்படுகிறது . அன்றிருந்த நடுத்தர மக்களின் வாழ்க்கையையும் காதலையும் அங்கதமும் நகைச்சுவையும் கலந்து விவரிக்கிறது. இப்புதினத்தின் ஒரு பாத்திரமான எட்வர்ட் பெர்ரார்ஸ் ஒரு வேலை இல்லாப் பட்டதாரி . வேலைக்குப் போகும் அவசியமும் இல்லாதவர். அவர் ஒரு பெரும் பணக்காரரின் தலைமகன். இருந்தாலும் வேலைக்குப் போகாமல் இருந்து விட்டதற்கு வருந்துபவர். காலம் கடந்தபின், தான் சேர்ந்திக்கக் கூடிய வேலைகளை நினைத்துப் பார்க்கிறார். தரைப்படை, கடற்படை, தேவாலயம், வக்கீல் என்கிற நான்கு வேலைகளில் ஏதாவது ஒன்று கிடைத்திருக்கலாம் என்றும், எதுவுமே அவருக்கு திருப்தி தந்திருக்காது என்றும்
மகரந்தம்
உலகின் ஜனத்தொகையில் 17% கொண்டுள்ள நம் நாட்டிலுள்ள புதுப்பிக்கக் கூடிய நீர் வளங்கள் உலகில் உள்ளதில் வெறும் 4 விழுக்காடு. இங்கே ஒரு புதிரான முரண்பாட்டையும் சொல்லியாகவேண்டும். உண்மையில் இந்தியா நீர்ப்பிரச்னை இருக்கக் கூடாத நீர்-மிகை நாடு. இங்கே தேவைக்கு மேல் மழை பெய்கிறது. மத்திய நீர் ஆணையத் தகவல்படி, நம் தேவை ஆண்டுக்கு 3000 பில்லியன் கன மீட்டர் மழை ; ஆனால் தேவையை விட 1000 பில்லியன் கன மீட்டர் அதிகமாக (அதாவது ஆண்டுக்கு 4000 பில்லியன் கன மீட்டர் ) மழை பெய்கிறது . ஆனால் இதில் 8% மட்டுமே நேரடி உபயோகத்துக்குக் கிடைக்கிறது. மீதி நிலத்தடிக்கும் கடலுக்கும் ஓடி விடுகிறது.
என்னை அடிமை மண்ணில் புதைத்துவிடாதீர்
இனிய நண்பர்களே , செல்வச் செருக்கினர் தனியொரு மனிதனின்
உயிராம் உரிமை பறிக்கா இடத்தில் உறங்குவேன்;
சக மனிதன் அடிமை என்போர் இல்லாத இடத்தில்
அமையும் கல்லறையில் என் ஒய்வு அமைதியாய்க் கழியும்.
குளக்கரை
‘மண்புழு குடியானவர்களின் நண்பன்’ என்பது பழைய தொடக்கப் பள்ளிகளில் ‘இயற்கைப் பாடமும் தோட்ட வேலையும்’ என்ற பாடப்பிரிவின் பாடப் புத்தகத்தில் நான் படித்த வாசகம். அதை விவசாயியான என் தாத்தாவிடம் காட்டி விளக்கம் கேட்டேன். அவர் ‘‘நாக்குப்பூச்சி தானே ? ஒரு பிரயோசனமும் இல்லை . அது நெல்வயலில் மண்டிப் போனால், வயல் நிறைய நீர் உறிஞ்சும். அதனால் நீர் இறைப்பு சிரமமாகி விடும்’ என்றார்.
விஜயா சிங் கவிதைகள்
எங்கேயோ கை வளையலில்
கணீரென ஒலித்தது
மூக்குத்தியில் மினுங்கியது.
மஞ்சள் வெயில் பட்டு
புத்தரின் காதணியில் ஊஞ்சலாடியது
வார் செருப்பின் மென் நடையில் கரணமடித்தது .
மொழியின் இயல்பு
மனிதர் இடையீடு இல்லாமல் கணினிகள் தாமாக தமக்கிடையே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிகிற அளவுக்கு செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் இன்றைய நிலையில் , மொழியின் வரையறுப்பும் விஸ்தரிக்கப்பட வேண்டிய நிலை வரக்கூடும். அப்போதும் மனிதனை ஆக்குவது மொழிதான். ஆனால் அவ்வாறு விஸ்தரிக்கப்பட்ட வரையறுப்பு, எந்திரங்கள் தம் சொந்த மொழியில் தமக்குள்ளே தொடர்பு வைக்க, தேவைகளையும் விருப்பங்களையும் தெரிவிக்க, ஆணையிட, உருவாக்க, உற்பத்தி செய்ய வழி வகுக்கும். ஆதியில் மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட மொழி, தன் மனித இணைப்புகளைத் துறந்த, ஒரு புது தொடர்பு அமைப்பாக வெளிப்படும்.